“பி.டி.ஆர் கால்வாயில் தரமற்ற கான்கிரீட் தளம்” – தேனி விவசாயிகள் புகார்

 

“பி.டி.ஆர் கால்வாயில் தரமற்ற கான்கிரீட் தளம்” – தேனி விவசாயிகள் புகார்

தேனி

தேனி மாவட்டம் பிடிஆர் கால்வாயில் அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் தளங்கள் தரமற்ற முறையில் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்னர். தேனி மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள முல்லை பெரியார் ஆற்றில் இருந்து, உத்தமபாளையம் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிற்கு தந்தை பெரியார் பி.டி.ஆர் கால்வாய் பாய்கிறது.

“பி.டி.ஆர் கால்வாயில் தரமற்ற கான்கிரீட் தளம்” – தேனி விவசாயிகள் புகார்

இந்த கால்வாயின் கரைகள் மற்றும் தண்ணீர் ஓடும் தளத்தை, சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜங்கள்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் கால்வாய் பணிகள் தரமற்ற முறையில் உள்ளதாக அந்த பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய கிராமமக்கள், பி.டி.ஆர் கால்வாய் கரையின் இருபுறத்தையும் வலுபடுத்தாமல் முறையாக கான்கிரீட் கலவையை பயன்படுத்தாமல் பணிகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.

“பி.டி.ஆர் கால்வாயில் தரமற்ற கான்கிரீட் தளம்” – தேனி விவசாயிகள் புகார்

மேலும், ஒரு மீட்டர் நீளத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை செலவிடுவதாக கூறப்படும் நிலையில், பணிகள் தரமானதாக இல்லை என்றும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வுசெய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். புகார் குறித்து பேசிய பொதுப் பணித்துறை அதிகாரிகள், டெண்டரில் கோரப்பட்டுள்ள முறையிலேயே பணிகள் நடைபெறுவதாகவும், பணிகளில் தவறு ஏதும் நடைபெறவில்லை என்றும் விளக்கம் அளித்தனர்.