பிடிஆர் தியாகராஜனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் -முதல்வருக்கு எச்.ராஜா வலியுறுத்தல்

பிடிஆர் தியாகராஜனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் -முதல்வருக்கு எச்.ராஜா வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்ல முயன்றபோது உயர்நீதிமன்றம் ஊர்வலத்திற்கு தடை விதித்து இருந்ததை போலீசார் அறிவுறுத்தினர். அப்போது போலீசாரையும் நீதிமன்றத்தையும் அவதூறாக பேசினார் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா இந்த.

பிடிஆர் தியாகராஜனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் -முதல்வருக்கு எச்.ராஜா வலியுறுத்தல்

வழக்கில் திருமயம் உரிமையியம் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த தால் இன்றைக்கு எச். ராஜா நேரில் ஆஜரானா. ர் அவருடன் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எச். ராஜாவின் மருமகனும் ஆர்எஸ்எஸ் நிர்வாகியுமான சூரியநாராயணன் ஆஜராகினார். இவர்களுக்காக புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

பிடிஆர் தியாகராஜனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் -முதல்வருக்கு எச்.ராஜா வலியுறுத்தல்

வழக்கை விசாரித்த நீதிபதி இந்திரா காந்தி வருகின்ற 17ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எச். ராஜா, நீதிமன்ற உத்தரவுப்படி இன்றைக்கு திருமையம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினேன். அனுபவம் வாய்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் எங்களுக்காக ஆஜராகி இருக்கிறார்கள். இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறார் என்று தெரிவித்தார்.

பிடிஆர் தியாகராஜனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் -முதல்வருக்கு எச்.ராஜா வலியுறுத்தல்

மேலும், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தேச விரோதமாக பேசுவது பிரதமரை இழிவாக பேசுவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இவை கடும் கண்டனத்திற்கு உரியவை. யாரேனும் இங்கு சமூகவலைதளத்தில் ஏதாவது கருத்து இருந்தால் பகிர்ந்தால் கூட உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்கிறது காவல் துறை. ஆனால் நாட்டின் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் இந்து சமுதாயத்தினரையும் இழிவாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை ஏன் இன்னும் காவல்துறை கைது செய்யாமல் இருக்கிறது? அவரை ஏன் இன்னமும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவில்லை என்ற கேள்வியை எழுப்பினார்.

பிடிஆர் தியாகராஜனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் -முதல்வருக்கு எச்.ராஜா வலியுறுத்தல்

நீதிமன்றமே நக்சலைட் என்று கூறிய ஸ்டேன் சாமிக்கு தமிழக முதல்வர் நேரில் அஞ்சலி செலுத்தியது கண்டிக்கத்தக்கது அது தவறான செயல் அதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதேபோல விவசாயிகளை திருடர்கள் என்று இழிவுபடுத்திப் பேசிய தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . திமுக ஆட்சியை கொண்டு வருவதற்கு இவர் ஒருவரே போதும். தமிழக முதலமைச்சர் இவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.