பேடிஎம் மினி ஆப்ஸ் ஸ்டோர் – கூகுள் பிளே ஸ்டோருக்கு போட்டியாக களம் இறங்கும் பேடிஎம்!

பேடிஎம் மினி ஆப்ஸ் ஸ்டோர் –  கூகுள் பிளே ஸ்டோருக்கு போட்டியாக களம் இறங்கும் பேடிஎம்!

கூகுள் பிளேஸ்டோருக்கு போட்டியாக ஒரு மினி ஆப்ஸ் ஸ்டோரை பேடிஎம் நிறுவனம் தொடங்கி உள்ளது.

பேடிஎம் மினி ஆப்ஸ் ஸ்டோர் –  கூகுள் பிளே ஸ்டோருக்கு போட்டியாக களம் இறங்கும் பேடிஎம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு, விதிகளுக்கு புறம்பாக நடந்துகொண்டதாக கூறி பேடிஎம் செயலியை பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக கூகுள் நிறுவனம் நீக்கியது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர் சில மணிநேர சமாதான முயற்சிகளுக்கு பிறகு, பிளே ஸ்டோரில் மீண்டும் பேடிஎம் செயலி இடம்பெற்றது. அப்போதில் இருந்தே பேடிஎம் நிறுவனத்திற்கும் கூகுள் நிறுவனத்திற்கும் உரசல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆண்டிராய்ட் மினி ஆப்ஸ் ஸ்டோர் ஒன்றை பேடிஎம் நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்தியாவில் உருவாக்கப்படும் ஆப்ஸ்களை அதில் இடம்பெற செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஸ்டோரில், நேட்டிவ் ஆப்ஸ்களுக்கு பதிலாக, செயலி ரூபத்தில் செயல்படும் வலைதள ஆப்ஸ்கள், இடம்பெறும் என தெரிகிறது.

பேடிஎம் மினி ஆப்ஸ் ஸ்டோர் –  கூகுள் பிளே ஸ்டோருக்கு போட்டியாக களம் இறங்கும் பேடிஎம்!

இந்த மினி ஆப்ஸ் ஸ்டோர் அறிமுகமாகும் போதே இதில் 300க்கும் மேற்பட்ட செயலிகள் இடம்பெற்றுள்ளன. அதில் ஓலா, டோமினோஸ், நெட்மெட்ஸ் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் செயலிகளும் அடங்கும்.

அதிகம் செலவு செய்து ஆண்டிராய்ட் ஆப்ஸ் உருவாக்க விரும்பாத சிறிய நிறுவனங்கள், தங்களது வலைதளத்தை செயலி ரூபத்தில் இயங்க செய்து, அந்த செயலியை மினி ஆப்ஸ் ஸ்டோரில் இடம்பெற செய்யலாம் என தெரிவித்துள்ள பேடிஎம் நிறுவனம், ஆப்ஸ்களுக்குள் நடக்கும் இன் ஆப் பர்சேஸ்களில் கூகுளுக்கு 30 சதவீத கமிஷன் தொகையும் அளிக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது என பேடிஎம் தெரிவித்துள்ளது.

பேடிஎம் மினி ஆப்ஸ் ஸ்டோர் –  கூகுள் பிளே ஸ்டோருக்கு போட்டியாக களம் இறங்கும் பேடிஎம்!
  • எஸ். முத்துக்குமார்