பட்டுக்கோட்டை சுயேட்சை வேட்பாளர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

 

பட்டுக்கோட்டை சுயேட்சை வேட்பாளர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 28,897பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்து 80ஆயிரத்து 259ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனா சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1,44,547 ஆக அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் நேற்று ஒரேநாளில் 6,884பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.அத்துடன் நேற்று கொரோனாவால் 236 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,648 ஆக உயர்ந்துள்ளது.

பட்டுக்கோட்டை சுயேட்சை வேட்பாளர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். கொரோனா பாதித்து புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் சுயேச்சை வேட்பாளராக பாலகிருஷ்ணன் போட்டியிட்டார். பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்ட இவர் 23 ஆயிரத்து 771 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். சட்டமன்ற தேர்தலின்போது பல்வேறு நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.இதில் சில உயிரிழப்புகளும் நிகழ்ந்தது. இந்த சூழலில் சுயேச்சை வேட்பாளர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.