பரிசோதனையின்போது தவறான முகவரி கொடுக்கும் நோயாளிகள்… ராமதாஸ் வேதனை

 

பரிசோதனையின்போது தவறான முகவரி கொடுக்கும் நோயாளிகள்… ராமதாஸ் வேதனை

கொரோனா பரிசோதனை செய்யும்போது சிலர் தவறான முகவரி கொடுப்பதன் மூலம் அவர்கள் பலரின் உயிரோடு விளையாடுகிறார்கள் என்று ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

பரிசோதனையின்போது தவறான முகவரி கொடுக்கும் நோயாளிகள்… ராமதாஸ் வேதனை
கொரோனா பரிசோதனை செய்ய வரும் சிலர் தங்களின் உண்மையான முகவரியைக் கொடுப்பது இல்லை. இதனால் அவர்களுக்கு கொரொனா உறுதியானாலும் அவர்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடிவதில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

http://


இது குறித்து டாக்டர் ராமதாஸ் தன்னுடைய வேதனை வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய ட்விட்டர் பதிவில், “கொரோனா சோதனைக்கு பலர் தவறான முகவரியை வழங்குவதால், அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டாலும் கூட கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க முடிவதில்லை என்று கூறப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது. பலரின் உயிருடன் விளையாடும் செயல்.

பரிசோதனையின்போது தவறான முகவரி கொடுக்கும் நோயாளிகள்… ராமதாஸ் வேதனைகொரோனா சோதனை நம்மையும், மற்றவர்களையும் காப்பதற்கான சோதனை. அதை முழு ஈடுபாட்டுடன் செய்து கொள்ள வேண்டும். சோதனையின் போது உண்மையான தகவல்களையே தர வேண்டும். சோதனை முடிவு தெரியும்வரை வெளியில் செல்லாமல் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அரசு மருத்துவமனையில் போதுமான உணவு, தண்ணீர் கூட கொடுக்க மறுக்கின்றனர் என்று நோயாளிகள் புகார் கூறுகின்றனர். அனைவரையும் அழைத்துச் சென்று மருத்துவமனையில் அடைத்துவிடுகின்றனர். ஏதாவது பாதிப்பு என்று நாமாக சென்று சொன்னால்தான் உதவியே கிடைக்கிறது. இந்த நிலை மாறினால் மட்டுமே சிகிச்சை எடுக்கத் தைரியத்துடன் மக்கள் வருவார்கள் என்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன பலரும் கூறுவது குறிப்பிடத்தக்கது.