தமிழகத்திலும் அந்த நிலை வந்து விட்டது… பரிதவிக்கும் கொரோனா நோயாளிகள்!

 

தமிழகத்திலும் அந்த நிலை வந்து விட்டது… பரிதவிக்கும் கொரோனா நோயாளிகள்!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவை உலுக்கி எடுத்து வருகிறது. வடமாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் நோயாளிகள் பரிதவிக்கும் செய்திகள் வெளியாகி பதைபதைக்க வைத்தன. அம்மாநிலங்களில் படுக்கைகள் நிரம்பியதால், நோயாளிகள் மருத்துவமனை வாசலிலும் வளாகங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திலும் அந்த நிலை வந்து விட்டது… பரிதவிக்கும் கொரோனா நோயாளிகள்!

ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகள் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் படுக்க வைக்கப்பட்டிருக்கும் புகைப்படமும் டெல்லியில் ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான சடலங்கள் எரியூட்டப்படும் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது போன்ற நிலை பிற மாநிலங்களிலும் நிகழா வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது.

தமிழகத்திலும் அந்த நிலை வந்து விட்டது… பரிதவிக்கும் கொரோனா நோயாளிகள்!

அந்த வகையில், தமிழகத்தில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நோயாளிகள் மருத்துவமனைகளின் வளாகங்களில் காத்துக் கிடக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் இன்று காலை படுக்கைக்காக காத்துக் கிடந்த 3 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாததால் நோயாளிகள் பல மணி நேரமாக வெளியிலேயே காத்துக் கிடப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

அம்மருந்துவமனையில் உள்ள 325 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பிவிட்டதால் நோயாளிகள் மருத்துவமனையின் வாயிலிலும், மரத்தடிகளிலும் காத்துக் கிடக்கின்றனர். அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.