ஆம்புலன்ஸிலேயே மூன்று மணி நேரமாக காத்திருக்கும் நோயாளிகள்… கோவையில் தொடரும் அவலம்!

 

ஆம்புலன்ஸிலேயே மூன்று மணி நேரமாக காத்திருக்கும் நோயாளிகள்… கோவையில் தொடரும் அவலம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் மருத்துவமனை வாயிலிலேயே காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளுக்கே தட்டுப்பாடு நிலவுவதால், படுக்கைகள் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. அவை விரைவில் பயன்பாட்டுக்கு வருமென அரசு உறுதியளித்துள்ளது.

ஆம்புலன்ஸிலேயே மூன்று மணி நேரமாக காத்திருக்கும் நோயாளிகள்… கோவையில் தொடரும் அவலம்!

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனுக்கு முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப் பட்டிருப்பதால் நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்துக் கிடக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்டங்களுள் கோவையும் ஒன்று. அங்கிருக்கும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் முன்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அவசர தேவைக்கு வரும் நோயாளிகள் கூட ஆம்புலன்ஸிலேயே காத்துக் கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.