‘அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை’… முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என கொரோனா நோயாளிகள் புகார்!

‘அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை’… முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என கொரோனா நோயாளிகள் புகார்!

தமிழகத்தில் கொரோனவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுள் ஒன்று செங்கல்பட்டு. அங்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு 4,000ஐ எட்டியிருந்த நிலையில் நேற்று மேலும் 162 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,073 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் பாதிப்பும் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே வருவதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமே இருக்கிறது.

‘அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை’… முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என கொரோனா நோயாளிகள் புகார்!

இதன் காரணமாகச் செங்கல்பட்டில் நோயாளிகளை 3இல் இருந்து 4 நாட்கள் வரை வைத்திருந்து கல்லூரிகளுக்கு மாற்றி விடுகிறார்களாம். இந்த நிலையில், தனியார் மருத்துவமனையிலிருந்து சேலையூர் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு வார்டுக்கு 300 நோயாளிகள் மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையாகச் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் வருவதில்லை என்றும் மருத்துவமனை வளாகமும் கழிவறையும் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.