பதஞ்சலி மாத்திரைகளை விற்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் அனுமதி!

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ், கொரோனில் என்ற பெயரில் தாங்கள் தயாரித்த மருந்தை நோய் எதிர்ப்பு சக்தி ஊக்கி என்ற பெயரில் விற்க ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மருந்து தயாரிப்பு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சோதனை முடிவுகளையும் சமர்ப்பித்துதான் இந்த அனுமதியை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தவிர மேலும் சில மருந்துகளும் தயாரிப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நவீன கால மருத்துவ அறிவியல் வழிகாட்டுதல்களை பின்பற்றியே தங்கள் ஆய்வுகள், சோதனைகள் அமைந்ததாகவும் ராம்தேவ் குறிப்பிட்டார்.


இந்த நாட்டில் ஆயுர்வேத மருத்துவம் வளர்வதை பலர் விரும்பவில்லை என்றும் அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டு வரும் தன்னை ஒரு கிரிமினல் குற்றவாளி போல் சித்தரித்து சிறையில் தள்ள முயற்சிப்பதாகவும் ராம்தேவ் வேதனை தெரிவித்தார். பல்வேறு நோய்களுக்கு தங்கள் நிறுவனம் மருந்து கண்டு பிடித்து வருவதாகவும் இதில் கிடைத்து வரும் சாதகமான முடிவுகள் இந்திய விரோத சக்திகளுக்கும் பெரு மருந்து நிறுவனங்களுக்கும் அதிர்ச்சியை தந்துள்ளதாகவும் ராம்தேவ் கூறினார். ஹெபடைடிஸ் மற்றும் ஆஸ்துமா நோய்களை ஆயுர்வேத மருந்துகளால் குணப்படுத்தி உள்ளோம் எனவும் பாபா ராம் தேவ் தெரிவித்தார்.

கொரோனாவை குணப்படுத்த பதஞ்சலி நிறுவனம் மருந்து தயாரித்தது எனவும் அதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில், பதஞ்சலி மாத்திரைகளை விற்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் பதஞ்சலி நிறுவனம் தயாரித்த இந்த மருந்துக்கு கோவிட் மேலாண்மை என்று பெயர் சூட்டலாமே தவிர கோவிட் சிகிச்சை என்று பெயர் சூட்டக் கூடாது என்றும் ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பதஞ்சலி நிறுவனத்தின் இந்த மருந்து சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது.

Most Popular

பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆஜிஸ் கான். இவருக்கு கடவுள் கிருஷ்ணர் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி அன்று ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணர் பிறந்த தினத்தில்...

நம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…

பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...

48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...

மாவட்ட மருத்துவமனை டாக்டர் லீவு.. வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மிசோரம் எம்.எல்.ஏ.

மிசோரம் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) இசட்.ஆர். தியம்சங்கா. அவர் அடிப்படையில் ஒரு மருத்துவர். மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர். கடந்த திங்கட்கிழமையன்று சம்பாய் மாவட்டத்தில் தனது தொகுதியில் நில நடுக்கத்தால்...
Do NOT follow this link or you will be banned from the site!