ஈரோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 27 இடங்களில் பூங்காக்கள்

 

ஈரோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 27 இடங்களில் பூங்காக்கள்

ஈரோடு மாநகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 27 இடங்களில் பூங்காக்கள் அமைக்கப் ரூ.15 கோடி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 27 இடங்களில் பூங்காக்கள்

ஈரோடு மாநகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் நான்கு மண்டலங்களுக்கு உட்பட்ட 60 வார்டில் உள்ள 27 இடங்களில் சிறு பூங்காக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தன. தற்போது வரை 25 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 27 இடங்களில் பூங்காக்கள்

நேற்று 25 – வது பூங்காவாக முனிசிபல் காலனி ரூ 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ஈரோடு மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதில் ஈரோடு மாநகர் பகுதியில்

ஈரோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 27 இடங்களில் பூங்காக்கள்

உள்ள நான்கு மண்டலங்களுக்கும் உட்பட்ட 27 இடங்களில் பூங்காக்கள் அமைக்க 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் 25 பூங்காக்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. இன்னும் டெலிபோன் நகர் மற்றும் வ. உ. சி பூங்கா பகுதியில் சிறுவர்களுக்கான பூங்கா அமைக்கும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த இரு பூங்காக்களும் திறக்கப்படும் என்றனர்.