Pariksha Pe Charcha 2.0: பிரதமர் அறிவுரையை கேட்க பள்ளி, கல்லூரிகளுக்கு வற்புறுத்தல்

 

Pariksha Pe Charcha 2.0: பிரதமர் அறிவுரையை கேட்க பள்ளி, கல்லூரிகளுக்கு வற்புறுத்தல்

தேர்வுகளை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கு பிரதமர் மோடியின் அறிவுரையை கேட்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி: தேர்வுகளை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கு பிரதமர் மோடியின் அறிவுரையை கேட்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக பிரதமர் மோடி அறிவுரை வழங்கும் Pariksha Pe Charcha என்ற நிகழ்ச்சி கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இதில் டெல்லியை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு அவருடன் உரையாடினர். அதேபோல் இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி Pariksha Pe Charcha 2.0 என்ற பெயரில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா மட்டுமின்றி வெவ்வேறு நாட்டை சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டு உரையாடினர். இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வு, டெல்லியில் உள்ள டல்கட்டோரா மைதானத்தில் நடைபெற்றது.

Pariksha Pe Charcha நிகழ்ச்சி வருகிற செவ்வாய் காலை 11 மணி முதல் 1 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இதனை மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என மத்திய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிரதமரின் கலந்துரையாடல் இதில் நடைபெறும். Pariksha Pe Charcha நிகழ்ச்சி நடைபெறும் நாளில் யாரும் விடுமுறை எடுக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொள்ள பட்டிருக்கிறது.