கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம்… 13 சதவீத பெற்றோர்கள் கருத்து…

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய லாக்டவுனை நடைமுறைப்படுத்தியது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. சுமார் 70 நாட்களுக்கு மேலாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. சில கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வாயிலாக மாணவர்களுக்கு பாடங்களை எடுத்து வருகின்றன.இந்த சூழ்நிலையில், லாக்டவுன் விதிமுறைகளை படிப்படியாக தளர்த்தப்பட்டுவருவதால் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி வகுப்பறை

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக வழிகாட்டுதல்களை தயார் செய்து வருகிறது. அதேசமயம் பள்ளிகளுக்கு தங்களது குழந்தைகளை அனுப்புவதில் பெற்றோர்கள் மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதுமாக மொத்தம் 224 மாவட்டங்களில் மீண்டும் பள்ளிகள் திறப்பது தொடர்பாக பெற்றோர்களிடம் ஒரு ஆய்வு ஒன்றை லோக்கல்சர்க்கிள் மேற்கொண்டது. அந்த ஆய்வில் முடிவில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் சில நாடுகளில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டப்பிறகு பல பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என்ற தகவல் காரணமாக, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது தெரியவந்துள்ளது.

கொரோானா வைரஸ் தடுப்பூசி மருந்து

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, சமூக விலகல் மற்றும் இதர நடவடிக்கைகளை செயல்படுத்த பள்ளிகள் ஏற்பாடு செய்து இருக்கும் என்ற நம்பிக்கை பெரும்பாலான பெற்றோர்களிடம் இல்லை. மேலும் ஆன்லைன் வகுப்புகளை தொடரவே அவர்கள் விரும்புகின்றனர். ஆய்வில் பங்கேற்ற 18 ஆயிரம் பெற்றோர்களில் 11 சதவீதம் பேர் மட்டுமே பள்ளிகளை மீண்டும் திறக்க ஆதரவு அளித்துள்ளனர். கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுப்பிடித்தபிறகு பள்ளிகளை திறக்கலாம் என 13 சதவீதம் பேரும், 3 வாரத்துக்கு புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றால் பள்ளிகளை திறக்காலம் என 20 சதவீதத்துக்கும் அதிகமான பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர். 21 நாட்களுக்கு மாவட்டம் மற்றும் அதன் 20 கி.மீட்டர் சுற்று பரப்பில் புதிதாக யாருக்கும் கொரோனா இல்லையென்றால் பள்ளிகளை திறக்கலாம் என 37 சதவீத பெற்றோர் தெரிவித்தனர்

Most Popular

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு!

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி லாஜிஸ்டிக் மற்றும் பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட முன்னனி 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக, லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களான (FedEX) பெடக்ஸ், யு.பி.எஸ்...

சீனாவுக்கு படையெடுத்த வெட்டுக்கிளி!

பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டிய வெட்டுக்கிளிகள் சீனாவில் நுழைந்துள்ளன. கொரானாவால் நாட்டின் நிதி நிலைமை கெட்டது என்றால்,சமீபத்தில் படையடுத்து வரும் வெட்டுக்கிளிகளால் எதிர்காலத்தில் உணவுப்பஞ்சம் ஏற்படுமோ என்று அச்சம் உருவாகியுள்ளது. இந்தியாவில் வடமாநிலங்களுக்குள்...

கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.02% ஆக உயர்வு- மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 8,78, 254 லிருந்து 9,04,225 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,69, 753 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,711 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார...

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய...
Open

ttn

Close