ஓட்டல்களில் இனி பார்சல் மட்டுமே வழங்கப்படும்- ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு

 

ஓட்டல்களில் இனி பார்சல் மட்டுமே வழங்கப்படும்- ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 12 நாட்களில் காய்கறி, மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் மக்கள், வாகனங்களைப் பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே, அதாவது 2 கி.மீ தொலைவிற்குள் மட்டுமே சென்று பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் டீக்கடைகள் இயங்க அனுமதி கிடையாது என்றும் தமிழக அரசு அறிவித்தது.

ஓட்டல்களில் இனி பார்சல் மட்டுமே வழங்கப்படும்- ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் நாளை முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டுமே வழங்கப்படும் என ஓட்டல் சங்கம் முடிவெடுத்துள்ளது. உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளது. மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காகவே இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஓட்டல்களில் 50% இருக்கைகள் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும், ஏ.சி பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் கடந்த 8 ஆம் தேதி ஓட்டல்கள் திறக்கப்பட்டது குறிப்பிடதக்கது.