ஆயுஷ் அமைச்சகத்தில் சித்த மருத்துவ ஆலோசகர் பதவி கலைப்பு! – இதுதான் தமிழகத்துக்கு கொடுக்கும் மதிப்பா?

 

ஆயுஷ் அமைச்சகத்தில் சித்த மருத்துவ ஆலோசகர் பதவி கலைப்பு! – இதுதான் தமிழகத்துக்கு கொடுக்கும் மதிப்பா?


மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தில் சித்த மருத்துவ இணை ஆலோசகர் பதவி கலைக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் தமிழர்களுக்கு அளிக்கும் மரியாதையா என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு தமிழகத்துக்கு எதிரான செயல்களில ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு தமிழ், தமிழர் விரோத நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

ஆயுஷ் அமைச்சகத்தில் சித்த மருத்துவ ஆலோசகர் பதவி கலைப்பு! – இதுதான் தமிழகத்துக்கு கொடுக்கும் மதிப்பா?


கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவத்தில் வழி உள்ளது என்று கூறிய நிலையில் அது பற்றி மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. நீதிமன்றம் வரை சென்றும் கூட சித்த மருந்துகளை மத்திய சுகாதாரத் துறை, ஆயுஷ் அமைச்சகம் ஆய்வு செய்யாமல் வந்தன. சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட தமிழகத்தைச் சார்ந்தவர்களை வெளியேறும்படி ஆயுஷ் செயலாளர் அறிவித்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தற்போது மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் இருந்து சித்த மருத்துவ இணை ஆலோசகர் பதவி கலைக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவமே வேண்டாம் என்றால் ஆயுஷ் அமைச்சத்தின் எழுத்தில் உள்ள எஸ் ஐ தூக்கிவிடலாம் என்று நீதிமன்றம் கூறிய வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றன.


மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்வீடில், “ஆயுஷ் அமைச்சகத்தில் சித்த மருத்துவ இணை ஆலோசகராக சென்னையில் பணியாற்றி வந்த சித்த மருத்துவர் ரவி பதவி இறக்கம் செய்யப்பட்டதும், சித்த மருத்துவ இணை ஆலோசகர் பதவி கலைக்கப்பட்டதும் கண்டிக்கத்தக்கவை. சித்த மருத்துவம் மீது மத்திய அரசு பாகுபாடு காட்டுவதை இது உறுதி செய்கிறது!

ஆயுஷ் அமைச்சகத்தில் சித்த மருத்துவ ஆலோசகர் பதவி கலைப்பு! – இதுதான் தமிழகத்துக்கு கொடுக்கும் மதிப்பா?


ஆயுர்வேதத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சித்தா உள்ளிட்ட பிற மருத்துவ முறைகளுக்கு வழங்கப்படுவதில்லை. ஆயுர்வேதம் தவிர்த்த மற்ற இந்திய மருத்துவ முறைகளின் அடையாளத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆயுஷ் அமைச்சகம் செயல்படுவது சரியல்ல.
சித்த மருத்துவம் என்பது தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறையாகும். அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை எதிர்த்து போராட தமிழ்நாட்டு மக்களும், தமிழ் உணர்வாளர்களும் முன்வர வேண்டும். ஒரு கை ஓசை தராது. ஊர்கூடித் தான் தேர் இழுக்க வேண்டும் என்பதை மக்கள் உணர வேண்டும்!” என்று கூறியுள்ளார்.