பட்ஜெட் தாக்கல் : நாடாளுமன்றம் புறப்பட்டார் நிர்மலா சீதாராமன்!

 

பட்ஜெட் தாக்கல் : நாடாளுமன்றம் புறப்பட்டார் நிர்மலா சீதாராமன்!

கொரோனா அச்சுறுத்தலால் முதன்முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 29 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற இரு சபைகளிலும் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது, எதிர்க்கட்சியினர் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்கட்சியினரின் எதிர்ப்பு இடையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணி வரை அவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பட்ஜெட் தாக்கல் : நாடாளுமன்றம் புறப்பட்டார் நிர்மலா சீதாராமன்!

இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. கூட்டத்தொடரின் முக்கிய நாளான இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021- 2022ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார். இதற்காக தனது இல்லத்தில் இருந்து நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திற்கு புறப்பட்டார்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமனுக்கு இது மூன்றாவது பட்ஜெட். நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து பேப்பர்களை சமர்ப்பித்தே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் முதன்முறையாக நின்று நடைபெறவிருக்கும் கூட்டத்தொடரில், ஆவணங்கள் ஏதுமின்றி ஸ்மார்ட் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பட்ஜெட் தாக்கல் : நாடாளுமன்றம் புறப்பட்டார் நிர்மலா சீதாராமன்!

இது தொடர்பான அனைத்து தகவல்களும் ‘பட்ஜெட் மொபைல் ஆப்’ என்ற செயலியில் விவரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் அந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து விவரங்களை அறிந்து கொள்ளும் அளவிற்கு அந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் 8ஆவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.