“வாக்கு இயந்திர அறையில் கணிணி நிபுணர்கள் திடீர் விசிட்… தேர்தல் முடிவை மாற்ற சதி”

 

“வாக்கு இயந்திர அறையில் கணிணி நிபுணர்கள் திடீர் விசிட்… தேர்தல் முடிவை மாற்ற சதி”

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடந்துமுடிந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் பாதுகாப்பு மையங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. 24 மணி நேரங்களும் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தவிர அந்தந்த கட்சிக்காரர்களும் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றி கவனித்து வருகின்றனர். இச்சூழலில் பண்ருட்டியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

“வாக்கு இயந்திர அறையில் கணிணி நிபுணர்கள் திடீர் விசிட்… தேர்தல் முடிவை மாற்ற சதி”

தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் பெரும்பாலான கட்சிகள் வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்ற வலியுறுத்துகின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் அதற்கு முன்வருவதில்லை. தற்போது நான் போட்டியிடும் தொகுதியான பண்ருட்டியிலேயே முறைகேடுகள் நடந்திருப்பது எனது கவனத்திற்கு வந்திருக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

“வாக்கு இயந்திர அறையில் கணிணி நிபுணர்கள் திடீர் விசிட்… தேர்தல் முடிவை மாற்ற சதி”

அந்த வளாகத்தில் தேர்தல் அலுவலர், தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் தவிர யாரும் உள்ளே நுழைய முடியாது. அப்படியிருக்கையில் கைதேர்ந்த மூன்று கணினி நிபுணர்களை வளாகத்திற்குள் அனுமதித்திருக்கிறார்கள். அவர்களை அனுமதித்தது யார்? அவர்களுக்கு அங்கு என்ன வேலை இருக்கிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டதற்கு முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளிக்கிறார்கள். ஒருவரிடம் கேட்டால் மாணவர்களுக்கு கணினி வகுப்பு நடத்த அவர்கள் வந்ததாகக் கூறுகிறார். கொரோனா காரணமாக வகுப்புகள் நடக்காமல் இருக்கும் இந்தச் சூழலில் எப்படி அவர்கள் பாடம் நடத்தியிருக்க முடியும்?

“வாக்கு இயந்திர அறையில் கணிணி நிபுணர்கள் திடீர் விசிட்… தேர்தல் முடிவை மாற்ற சதி”

உடனே மாவட்ட ஆட்சியர், காவல் துறையினரை அழைத்துக் கேட்டால் அப்படியொரு தகவலே எங்களுக்கு தெரியாது என்கிறார்கள். இதுதொடர்பாக தலைமை தேர்தல் அலுவலரை தொடர்புகொண்டேன். அவர் எடுக்கவில்லை. அதனால் அவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு எனது புகாரை அனுப்பினேன். அதற்குப் பிறகு அந்த மூன்று நிபுணர்களை அங்கிருந்து திருப்பி அனுப்புவதாகக் கூறினார்கள். விஷயம் அதுவல்ல. ஒரு வேட்பாளரின் அனுமதியில்லாமல் அவர்களை அனுமதித்தது யார் என்று தெரிய வேண்டும். இது முழுக்க முழுக்க நான் வெற்றிபெறக் கூடாது என்பதற்காக பின்னப்பட்ட சதியாகவே பார்க்கிறேன்” என்றார்.