“அரசியலில் இருந்து விலகுகிறேன்” : அதிமுக பெண் எம்எல்ஏ-வின் திடீர் முடிவு!

 

“அரசியலில் இருந்து விலகுகிறேன்” : அதிமுக பெண் எம்எல்ஏ-வின் திடீர் முடிவு!

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ தான் அரசியலில் இருந்து விலகுவதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“அரசியலில் இருந்து விலகுகிறேன்” : அதிமுக பெண் எம்எல்ஏ-வின் திடீர் முடிவு!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல பரபரப்பான விஷயங்கள் அரங்கேறி வருகின்றன. கட்சி தாவல், சீட் தரவில்லை என்று போராட்டம், தீக்குளிப்பு முயற்சி உள்ளிட்ட செயல்கள் தற்போதுள்ள அரசியல் களத்தில் சாதாரணமானதாக மாறிவிட்டது. அந்த வகையில் பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் தனக்கு மீண்டும் சீட் அளிக்கப்படும் என்று நம்பி பல நலத்திட்டங்களை செய்து அங்குள்ள மக்களை கவர்ந்து வந்துள்ளார்.ஆனால் இந்த முறை பண்ருட்டி தொகுதி சொரத்துார் ராஜேந்திரனுக்கு அளிக்கப்பட்டுவிட்டது. இதனால் எம்எல்ஏ சத்யா மட்டுமில்லாது அவரது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

“அரசியலில் இருந்து விலகுகிறேன்” : அதிமுக பெண் எம்எல்ஏ-வின் திடீர் முடிவு!

இந்நிலையில் குடும்பச்சூழல் காரணமாக அரசியலில் இருந்து விலகுவதாக அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம், அறிவித்துள்ளார். முன்னாள் நகர மன்றத் தலைவரான அவரது கணவரும் அரசியலில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 75 ஆண்டுகளில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பல்வேறு அரசியல் ஜாம்பவான்களாலும் செய்யமுடியாத அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி தந்நதுள்ளேன் . இதன்மூலம் ஜாதி, மதம், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களின் அன்பையும், நன்மதிப்பையும், ஆதரவையும் பெற்றுள்ளேன். இதுவே எனக்கு நிறைவான மகிழ்ச்சி. எங்கள் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு அரசியல் மற்றும் பொதுவாழ்விலிருந்து நானும் என் கணவரும் விலகி கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.