சாதியை காரணம் காட்டி ஊராட்சித் தலைவர் அவமதிப்பு : மேலும் ஒருவர் கைது!

சாதியை காரணம் காட்டி  ஊராட்சித் தலைவர் அவமதிப்பு : மேலும் ஒருவர் கைது!

ஊராட்சித் தலைவர் அவமதிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாதியை காரணம் காட்டி  ஊராட்சித் தலைவர் அவமதிப்பு : மேலும் ஒருவர் கைது!

கடலூர் தெற்கு திட்டை பட்டியலின ஊராட்சி தலைவர் அவமதிக்கப்பட்ட வழக்கில் சுகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது பட்டியலினத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமரவைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இதுபோன்று சாதியை காரணம் காட்டி ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்டதாக தெரிகிறது .

சாதியை காரணம் காட்டி  ஊராட்சித் தலைவர் அவமதிப்பு : மேலும் ஒருவர் கைது!

இது குறித்து ராஜேஸ்வரி புவனகிரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சிந்துஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சாதியை காரணம் காட்டி  ஊராட்சித் தலைவர் அவமதிப்பு : மேலும் ஒருவர் கைது!

அந்த வகையில் தற்போது சுகுமார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள தெற்கு திட்டை ஊராட்சி துணை தலைவர் மோகன்ராஜை போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே, திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக் கூறி அவமதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.