கீழவன்னிப்பட்டு சிற்றூரில் பனை விழா!

 

கீழவன்னிப்பட்டு சிற்றூரில் பனை விழா!

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஏரியில் பனை நடும் விழா நடைபெற்றது. அங்குள்ள கீழவன்னிப்பட்டு கிராமத்தில் 5 ஆயிரம் பனை விதைகள் நட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள பெரிய ஏரியில் நடைபெற்ற விழாவில், ஊராட்சி மன்றத் தலைவர் தினகரன் தலைமையில் கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டனர். ஏஐடியுசி தொழிற்சங்க தலைவர் சி.சந்திரகுமார் பனை விதை விதைத்து விழாவை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கு.ராஜவேலு, 5 கோடி பனைவிதைகள் விதைக்கும் இயக்கத்தின் அமைப்பாளர் தங்க சண்முகசுந்தரம், பாரம்பரிய விதைகளை பரவலாக்கும் பசுமை எட்வின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கீழவன்னிப்பட்டு சிற்றூரில் பனை விழா!
கீழவன்னிப்பட்டு சிற்றூரில் பனை விழா!

இதற்கு முன்பு 1000 விதைகள் கீழவன்னிப்பட்டு பகுதியில் விதைக்கப்பட்டு உள்ள நிலையில் சேவகப்பெருமாள் கோயில் குன்னமையனார் கோயில் காளியம்மன் கோயில் காடுகளிலும் சிங்கநேரி வடிகால் வாய்க்காலின் இருகரைகளிலும் பனை விதைகள் விதைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 5000 விதைகள் கீழவன்னிப்பட்டு கிராமத்தில் விதைத்து முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கீழவன்னிப்பட்டு சிற்றூரில் பனை விழா!
கீழவன்னிப்பட்டு சிற்றூரில் பனை விழா!