#palayamkottai ‘இப்படியே போனா தமிழ்நாடு உருப்படாது’.. கொந்தளித்த பாளையங்கோட்டை மக்கள்!

 

#palayamkottai ‘இப்படியே போனா தமிழ்நாடு உருப்படாது’.. கொந்தளித்த பாளையங்கோட்டை மக்கள்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல், தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை முடித்த அரசியல் கட்சிகள் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன. ஆளுங்கட்சி ஒரு பக்கம், எதிர்க்கட்சி ஒரு பக்கம் என தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறந்து கொண்டிருக்கின்றன. இதனிடையே, தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்புகளும் நடைபெற்று வருகிறது.

#palayamkottai ‘இப்படியே போனா தமிழ்நாடு உருப்படாது’.. கொந்தளித்த பாளையங்கோட்டை மக்கள்!

பெரும்பான்மையான சர்வேக்கள் ஆட்சி மாற்றம் நிகழும் என்பதையே உறுதியாகச் சொல்கின்றன. சில கருத்துக் கணிப்புகள், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும் இருக்கின்றன. இப்படி இருக்கும் சூழலில் “அடுத்த முதல்வரை” தேர்ந்தெடுக்கப் போகும் மக்களின் நிலை எப்படி இருக்கிறது? யாருக்கு அவர்களது ஆதரவு? ஆட்சி மாற்றம் நடக்குமா? உள்ளிட்ட பல கேள்விகளுடன் நமது டாப் தமிழ் நியூஸ் செய்தி நிறுவனம் 234 தொகுதிகளிலும் சர்வே நடத்திக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில், இன்று நாம் பார்க்கப்போகும் தொகுதி பாளையங்கோட்டை…

#palayamkottai ‘இப்படியே போனா தமிழ்நாடு உருப்படாது’.. கொந்தளித்த பாளையங்கோட்டை மக்கள்!

திமுகவின் கோட்டை:

கடந்த 1991ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளர் தர்மலிங்கம், 1996ம் ஆண்டு திமுக கூட்டணியில் முகமது காதர் மொய்தீன் பாளையங்கோட்டை தொகுதியில் வெற்றி வாகையை சூடினர். இதையடுத்து 2001,2006, 2011 மற்றும் 2016ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் திமுக வேட்பாளர் மொய்தீன் கான் தொடர்ந்து வெற்றி கண்டார். இவ்வாறு கடந்த 30 ஆண்டுகளில், 5 முறை ஆட்சியை வெற்றி பெற்று திமுகவின் கோட்டையாகவே பாளையங்கோட்டை மாறியிருக்கிறது.

களம் காணும் வேட்பாளர்கள்:

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் கே.ஜே.சி.ஜெரால்டு போட்டியிடுகிறார். திமுக சார்பில் அப்துல் வகாப் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் டாக்டர் பிரேம்நாத் போட்டியிடுகிறார். இதை தவிர அமமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இந்த தொகுதியில் போட்டியிடுகின்றன.

#palayamkottai ‘இப்படியே போனா தமிழ்நாடு உருப்படாது’.. கொந்தளித்த பாளையங்கோட்டை மக்கள்!

#TTNsurvey ஆளப்போவது யார்?

பாளையங்கோட்டை தொகுதி கடந்த 25 ஆண்டுகளாக திமுகவின் வசம் இருக்கிறது. இங்கு திமுகவை வீழ்த்த எந்த கட்சியும் இல்லை என அக்கட்சியினர் மார்தட்டிக் கொள்கின்றனர். இப்படி இருக்கும் சூழலில், வரும் தேர்தலிலும் இந்த தொகுதி மக்கள் திமுகவுக்கு தான் வாக்களிக்க போகிறார்களா? யாருக்கு அவர்களது ஆதரவு என நமது செய்தியாளர் மக்கள் மத்தியில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பெரும்பாலான மக்கள் திமுகவுக்கே தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். ஸ்டாலின் தான் மீண்டும் வருவாரு என அந்த தொகுதி மக்கள் முழுமையாக நம்புகிறார்கள். திமுகவை தவிர ஒரு சிலர் நாம் தமிழர் கட்சிக்கும் அதிமுகவுக்கும் ஆதரவு தெரிவித்தார்கள். அதுமட்டுமில்லாமல், ஆளுங்கட்சி மீதான தங்களது அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்கள். ஆளுங்கட்சி தங்களுக்கு குடிநீர் வசதி, சாலை வசதியை செய்து கொடுக்கவில்லை என அவர்கள் தெரிவித்தார்கள்.

#palayamkottai ‘இப்படியே போனா தமிழ்நாடு உருப்படாது’.. கொந்தளித்த பாளையங்கோட்டை மக்கள்!

நமது சர்வேயின் முடிவில், பாளையங்கோட்டை தொகுதி மக்களின் ஆதரவு திமுகவுக்கு தான் அதிகப்படியாக இருக்கிறது என்றும் மீண்டும் அங்கு திமுக தான் வெற்றி பெரும் என்றும் தெரிய வந்திருக்கிறது. நமது இந்த கணிப்பு தேர்தலில் எதிரொலிக்கிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…!