ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடிவரும் பழனி பஞ்சாமிர்தம்!

 

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடிவரும் பழனி பஞ்சாமிர்தம்!

ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினால் பழனி பஞ்சாமிர்தம் வீட்டுக்கே அனுப்பிவைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதன்மையானது திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். ஆண்டிக்கோலத்தில் மலைமீது நிற்கும் மூலவர் சிலை, போகரால் நவபாஷாணம் கொண்டு உருவாக்கப்பட்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. அங்கு பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தம் உலக அளவில் பிரபலமான ஒன்றாகும். இந்த பஞ்சாமிர்தமானது  வாழைப்பழம், பேரீச்சம் பழம், தேன், ஏலக்காய்,   வெல்லம், நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சமீபத்தில் பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்தது.  

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடிவரும் பழனி பஞ்சாமிர்தம்!

இந்நிலையில் தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினால் பஞ்சாமிர்தத்துடன் கூடிய பழனி முருகன் கோயில் பிரசாதம் இல்லம் தேடி வரும். அரைகிலோ எடை கொண்ட லேமினேட்டட் டின் பஞ்சாமிர்தம், முருகர் புகைப்படம் மற்றும் இயற்கையான முறையில் தயார் செய்யப்பட்ட திருநீறு அனுப்பிவைக்கப்படும். இதற்காக ஆன்லைன் மூலம் ரூ.250 செலுத்தவேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.