பழனி முருகனை புகைப்படம் எடுத்த விவகாரம் : எல்.முருகன் மீது கோயில் நிர்வாகம் புகார்!

பழனி முருகனை புகைப்படம் எடுத்த விவகாரம் :  எல்.முருகன் மீது கோயில் நிர்வாகம் புகார்!

பழனி முருகனின் மூலவரை புகைப்படம் எடுத்து வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் மீது கோயில் நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பழனி முருகனை புகைப்படம் எடுத்த விவகாரம் :  எல்.முருகன் மீது கோயில் நிர்வாகம் புகார்!

முருகப்பெருமானின் திருக்கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் பழனி. அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் களைகட்டும். இருப்பினும் கொரோனா காரணமாக தற்போது கடும் கட்டுப்பாடுகளுடன் பழனி கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதே சமயம், மின் இழுவை சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பழனி முருகனை புகைப்படம் எடுத்த விவகாரம் :  எல்.முருகன் மீது கோயில் நிர்வாகம் புகார்!

இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி வேல் யாத்திரையையொட்டி பழனி கோயிலுக்கு மத்திய இணையமைச்சர் முரளிதரன்,எல். முருகன், அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கோயிலுக்கு சென்றனர். அப்போது முருகனை தரிசனம் செய்யும் போது மூலவர் தண்டாயுதபாணியை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆகம விதிகளின் படி மூலவரை புகைப்படம் எடுப்பது குற்றமாகும். இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் மீது கோயில் நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பழனி முருகனை புகைப்படம் எடுத்த விவகாரம் :  எல்.முருகன் மீது கோயில் நிர்வாகம் புகார்!

முன்னதாக கொரோனா காலத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மின் இழுவை ரயிலை பாஜகவினருக்காக இயக்கியுள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்து அறநிலையதுறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.