“இந்திய மக்களுடன் துணை நிற்கிறோம்” – பாகிஸ்தான் பிரதமர் உருக்கமான ட்வீட்!

 

“இந்திய மக்களுடன் துணை நிற்கிறோம்” – பாகிஸ்தான் பிரதமர் உருக்கமான ட்வீட்!

ஒரு வைரஸ் எப்படிப்பட்ட பேரழிவை உருவாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று என உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறுகிறார். இந்தியா மீது கரிசனம் காட்டி அவர் பேசினாலும் உலக நாடுகளுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக இந்தியாவைச் சொல்லியிருக்கிறார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசோ, இன்னும் சில வாரங்கள் நிலைமை படு மோசமாக இருக்கும்; எதையும் எதிர்கொள்ள துணிவுடன் இருங்கள் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

“இந்திய மக்களுடன் துணை நிற்கிறோம்” – பாகிஸ்தான் பிரதமர் உருக்கமான ட்வீட்!

பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவல் குறைந்திருக்கும் நிலையில் இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. வட மாநிலங்கள் எங்கு காணினும் மரண ஓலங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி ஒரே நாள் பாதிப்பு எண்ணிக்கையில் மோசமான சாதனையை இந்தியா செய்திருக்கிறது. தும்பை விட்டு வாலை பிடித்த கதையாய் மீண்டும் படிப்படியாக முழு ஊரடங்கு எனும் இருளுக்குள் இந்தியா பயணித்துக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

“இந்திய மக்களுடன் துணை நிற்கிறோம்” – பாகிஸ்தான் பிரதமர் உருக்கமான ட்வீட்!

இத்தகைய சூழலில் பாகிஸ்தான் மக்கள் இந்தியர்களுக்கு உதவ தயாராக இருப்பதாகக் கூறியிருக்கின்றனர். தவிர பாகிஸ்தான் அரசுக்கும் அவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ட்விட்டரில் #Pakistanstandwithindia என்ற ஹேஸ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகிறார்கள். உள்ளபடியே எல்லையில் இருக்கும் இந்தியர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். பாகிஸ்தான் மக்களின் இந்தப் பேராதரவு அரசு தலைமை வரை எதிரொலித்திருக்கிறது.

தற்போது ட்வீட் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “மிகக் கொடூரமான இந்த கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் இந்திய மக்களுக்கு நாங்கள் துணையாக இருக்க விரும்புகிறோம். இந்தியா, பாகிஸ்தானில் மட்டுமல்லாமல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து மக்களும் குணம்பெற நாங்கள் பிரார்த்திக்கிறோம். மனிதகுலத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா பேரிடரை நாம் அனைவரும் ஒன்றிணைந்து விரட்ட வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.