பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கு அதிக அளவில் தாமிரம் ஏற்றுமதி! – பிரதமருக்கு கடிதம் எழுதிய வேதாந்தா

 

பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கு அதிக அளவில் தாமிரம் ஏற்றுமதி! – பிரதமருக்கு கடிதம் எழுதிய வேதாந்தா

தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கு செல்லும் தாமிரத்தின் அளவு அதிகரித்துள்ளதாக வேதாந்தா நிறுவனம் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
அதிக மாசு காரணமாக தூத்துக்குடி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் பாதிக்கப்படுவதால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தினர். துப்பாக்கிச்சூடு நடத்தி பல உயிர்கள் பறிபோன நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு மூடுவிழா நடத்தியது.

பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கு அதிக அளவில் தாமிரம் ஏற்றுமதி! – பிரதமருக்கு கடிதம் எழுதிய வேதாந்தாஇந்த நிலையில் இந்தியாவில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பாகிஸ்தானில் இருந்து அதிக அளவில் சீனாவுக்கு தாமிரம் ஏற்றுமதியாகிறது. ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன மொபைலைப் பயன்படுத்திக்கொண்டு சீன ஆப்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று தீவிரமாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது பற்றி வேதாந்தா நிறுவனம் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறது. சீனா மீது மக்கள் வெறுப்பில் இருக்கும் நிலையில் அந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யத் துடிப்பது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் இது தொடர்பாக ட்விட்டரில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில், “இந்தியாவில் ஸ்டெர்லைட் அலை மூடப்பட்டதால், பாகிஸ்தானிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதியாகும் காப்பரின் அளவு அதிகரித்திருப்பதாக வேதாந்தா நிறுவனத் தலைவர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

http://

பாகிஸ்தான் அரசிற்கு அந்த நாட்டு மக்கள் மீதும், சூழல் மீதும் அக்கறை இல்லை என்பதால் தமிழக அரசும் இந்திய அரசும் அப்படி இருக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது. மாசு ஏற்படுத்தக்கூடிய அந்த ஆலையை திறப்பதற்கு மக்களும், தமிழக அரசும் அனுமதிக்கமாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.