சொதப்பும் பாகிஸ்தான்… இங்கிலாந்துக்கு இன்னொரு வெற்றியைத் தருமா?

 

சொதப்பும் பாகிஸ்தான்… இங்கிலாந்துக்கு இன்னொரு வெற்றியைத் தருமா?

இங்கிலாந்து – பாகிஸ்தான் நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேனா டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியை இங்கிலாந்து வென்று கணக்கைத் தொடங்கியது. இதனால், 1:0 எனும் முன்னிலையில் இங்கிலாந்து இருக்கிறது.

இரண்டாம் போட்டித் தொடங்கி இன்று நான்காம் நாள் ஆட்டம் முடிந்திருக்கிறது. இந்தப் போட்டித் தொடங்கியது முதலே மழைதான் பெரும் ஆட்டம் ஆடி வருகிறது. பல முறை குறுக்கிட்ட மழையால் இடைவெளி விட்டுவிட்டுதான் தொடர முடிந்தது.

சொதப்பும் பாகிஸ்தான்… இங்கிலாந்துக்கு இன்னொரு வெற்றியைத் தருமா?
PC: Twitter

முதலில் பேட்டிங் கண்ட பாகிஸ்தான் முதல் இன்னிங்க்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 236 ரன்களே எடுத்துள்ளது. முகமது ரிஸ்வான் 74 ரன்களும், அபிட் அலி 60 ரன்களும் எடுத்ததே அதிகம்.

பாகிஸ்தான் அணி வீரர்கள் பேட்டிங் செய்யவே பயப்படுகிறார்கள் என்று அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடும் விமர்சனம் செய்தார்கள்.

இங்கிலாந்து அணியில் ஸ்டூவர் பிராட் 4 விக்கெட்களையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணி பேட்டிங் தொடங்கியபோது 5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 7 ரன்கள் எடுத்துள்ளது.

சொதப்பும் பாகிஸ்தான்… இங்கிலாந்துக்கு இன்னொரு வெற்றியைத் தருமா?

மிஞ்சியிருக்கும் ஒரே நாளில் மதியம் நேரத்துக்குள் அதிக ரன்களை குவித்து கிட்டத்தட்ட டி20 மேட்ச் போல இங்கிலாந்து ஆடி, மீண்டும் பாகிஸ்தானை ஆட வைத்து அனைத்து விக்கெட்களை வீழ்த்தினால் வெற்றி பெற முடியும்.

பாகிஸ்தான் அணி ஸ்கோரை இங்கிலாந்து ட்ரையல் செய்ய முடியாமல் அனைத்து விக்கெட்டுகளை பாகிஸ்தான் வீழ்த்தி, மீண்டும் இங்கிலாந்து டீம் விளையாடி மீண்டும் அனைத்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.

இரண்டு வழிகளுமே சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. அதனால்தான் ரசிகர்களே 90 சதவிகிதத்திற்கு மேல் இந்த மேட்ச் டிராவில் முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.

அப்படி டிராவில் முடிவடையும் பட்சத்தில் மூன்றாம் மற்றும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அவசியம் வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்திற்குச் சென்று விடும்.