“பிரிஸ்பேன் ஆஸ்டிரேலியாவிலிருந்து அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் வரை தமிழோசை கேட்கிறது” – ப. சிதம்பரம்

 

“பிரிஸ்பேன் ஆஸ்டிரேலியாவிலிருந்து அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் வரை தமிழோசை கேட்கிறது” – ப. சிதம்பரம்

பிரிஸ்பேன் ஆஸ்டிரேலியாவிலிருந்து அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் வரை தமிழோசை கேட்கிறது என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. அதேபோல் மும்மொழி கொள்கைக்கும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதேபோல் அஞ்சல்துறை பணியாளர்களுக்கான தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில் எதிர்ப்பு கிளம்பியதால் தமிழிலும் அஞ்சலக தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரிஸ்பேன் ஆஸ்டிரேலியாவிலிருந்து அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் வரை தமிழோசை கேட்கிறது, நம் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்று பாடிய பாரதி நம்மை வானுலகிலிருந்து வாழ்த்துகிறார்.

இந்தி மொழியே இந்தியாவின் ஆட்சி மொழி என்று திட்டமிடுபவர்களை அடையாளம் காண்பது பிற மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர்களின் கடமை என்று உணர்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் மொழியின் பெருமையை உணர்த்தும் வகையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த அறிமுக வீரர் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் களமிறங்கி முதல் இன்னிங்சில் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அப்போது நடராஜனை கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேட்டி எடுத்த போது, ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா என்று பிரிஸ்பேனிலிருந்து நடராஜன் தமிழில் பேட்டியளித்து மாஸ் காட்டியது குறிப்பிடத்தக்கது.