மத்திய அரசு மக்களை முட்டாள்கள் என நினைக்கிறதா? ப. சிதம்பரம்

 

மத்திய அரசு மக்களை முட்டாள்கள் என நினைக்கிறதா? ப. சிதம்பரம்

இந்திய மக்களை முட்டாள்களாக நினைக்கும் மத்திய அரசுக்கு எதிராக மக்கள் ஒன்று திரள வேண்டுமென முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மக்களை முட்டாள்கள் என நினைக்கிறதா? ப. சிதம்பரம்

இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள ப. சிதம்பரம், ஆக்சிஜன் , தடுப்பூசிகள் தட்டுப்பாடு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் கூறுவது வியப்பளிக்கிறது. உத்தர பிரதேசத்தில் தடுப்பூசிகளுக்கு பஞ்சமில்லை என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெளியிட்ட அறிக்கை கண்டு திகைக்கிறேன்.

அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் போலி காட்சிகளை ஒளிபரப்புகின்றனவா? செய்தித்தாள் வெளியிடும் அனைத்தும் தவறா? மருத்துவர்கள் அனைவரும் பொய் சொல்கிறார்களா? குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தவறான அறிக்கைகளை வெளியிடுகிறார்களா? அல்லது அனைத்து சமீபத்தில் வடமாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அல்லல்படும் காட்சிகளும் புகைப்படங்களும் போலியானதா? இந்திய மக்கள் அனைவரையும் முட்டாள்தனமாக நடத்தும் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.