உலகுக்கு உபதேசம் செய்ததை மோடி அரசாங்கம் இந்தியாவில் செயல்படுத்த வேண்டும்.. ப.சிதம்பரம் தாக்கு

 

உலகுக்கு உபதேசம் செய்ததை மோடி அரசாங்கம் இந்தியாவில் செயல்படுத்த வேண்டும்.. ப.சிதம்பரம் தாக்கு

ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேசியதை குறிப்பிட்டு, உலகுக்கு உபதேசம் செய்ததை மோடி அரசாங்கம் இநதியாவில் பின்பற்ற அல்லது செயல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ்,கனடா, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கியது ஜி7 கூட்டமைப்பு. இந்த கூட்டமைப்பின் 47வது உச்சிமாநாடு இங்கிலாந்தில் கார்ன்வால் மாகாணத்தில் நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் உள்பட ஜி7 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதேசமயம், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து இந்தியா சார்பில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக அந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.

உலகுக்கு உபதேசம் செய்ததை மோடி அரசாங்கம் இந்தியாவில் செயல்படுத்த வேண்டும்.. ப.சிதம்பரம் தாக்கு
ஜி 7 அமைப்பின் தலைவர்கள்

மோடி பேசுகையில், உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றை திறம்பட கையாள்வதற்கு ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற அணுகுமுறை வேண்டும். கோவிட் தடுப்பூசிகளுக்கான காப்புரி தற்காலிக விலக்கலுக்கு ஜி7 தலைவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். சர்வாதிகாரவாதம், பயங்கரவாதம், வன்முறை தீவிரவாதம் மற்றும் பொருளாதார வற்புறுத்தல் ஆகியவற்றிலிருந்து உருவாகும்அச்சுறுத்தல்களிலிருந்து ஜனநாயகம், சிந்தனை சுதந்திரம் மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பதில் ஜி7 மற்றும் கூட்டாளிகளுக்கு இந்தியா ஒரு இயற்கையான நட்பு நாடு என்று பேசியிருந்தார்.

உலகுக்கு உபதேசம் செய்ததை மோடி அரசாங்கம் இந்தியாவில் செயல்படுத்த வேண்டும்.. ப.சிதம்பரம் தாக்கு
பிரதமர் நரேந்திர மோடி

ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியின் பேச்சை காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பாராட்டியதுடன் விமர்சனமும் செய்தார். ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான டிவிட்டில், ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடியின் உரை ஊக்கமளிக்கும் வகையிலும் அதேசமயம் முரண்பாடாகவும் இருந்தது. உலக்கு உபதேசம் செய்ததை மோடி அரசாங்கம் இந்தியாவில் செயல்படுதத வேண்டும். சிறப்பு விருந்தினர்களில் பிரதமர் மோடி மட்டும்தான் நேரடியாக கலந்து கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஏன் என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்? நாம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் குறைந்த தடுப்பூசி போட்ட நாடு (மக்கள்தொகையின் விகிதமாக) என்று பதிவு செய்துள்ளார்.