21 நாளில் கொரோனாவை நாம் தோற்கடிப்போம்ன்னு மோடி உறுதியாக சொன்னார்.. ஆனால் தோற்றது ஏன்?.. ப.சிதம்பரம்

21 நாளில் கொரோனாவை நாம் தோற்கடிப்போம்ன்னு மோடி உறுதியாக சொன்னார்.. ஆனால் தோற்றது ஏன்?.. ப.சிதம்பரம்

21 நாளில் கொரோனாவை நாம் தோற்கடிப்போம்ன்னு மோடி சொன்னார் ஆனால் இந்தியா தோற்றது ஏன் என்பதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜனவரி இறுதியில் கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. அதன் பிறகு கொரோனா வைரஸ் நம் நாட்டில் மெதுவாக பரவ தொடங்கியது. மார்ச் மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவ தொடங்கியது. இதனையடுத்து அந்த மாதத்தின் கடைசி வாரத்தில் நாடு தழுவிய லாக்டவுனை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.

21 நாளில் கொரோனாவை நாம் தோற்கடிப்போம்ன்னு மோடி உறுதியாக சொன்னார்.. ஆனால் தோற்றது ஏன்?.. ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

பிரதமர் நரேந்திர மோடி லாக்டவுனை அமல்படுத்தும் போது, 21 நாட்களில் நாம் கொரோனாவை தோற்கடிப்போம் என உறுதியாக தெரிவித்தார். ஆனால் 5 மாதங்கள் கடந்து விட்டபோதும் கொரேனா பரவல் கட்டுக்குள் வராமல் மேலும் தீவிரமாகி உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது தொடர்பாக ப.சிதம்பரம் மத்திய அரசை விமர்சித்து டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

21 நாளில் கொரோனாவை நாம் தோற்கடிப்போம்ன்னு மோடி உறுதியாக சொன்னார்.. ஆனால் தோற்றது ஏன்?.. ப.சிதம்பரம்
பிரதமர் மோடி

ப.சிதம்பரம் டிவிட்டரில், லாக்டவுன் செயல்திட்டத்தின் பலனை அறுவடை செய்யாத ஒரே நாடு இந்தியா என்று தோன்றுகிறது. 21 நாட்களில் கொரோனாவை தோற்கடிப்போம் என பிரதமர் உறுதி அளித்தார். ஆனால் மற்ற நாடுகள் வெற்றி கண்டது போல் தெரிகையில் இந்தியா ஏன் தோற்றது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பதிவு செய்துள்ளார். மற்றொரு டிவிட்டில், செப்டம்பர் 30ம் தேதிக்குள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்தை எட்டும் என நான் கணித்து இருந்தேன். ஆனால் நான் சொன்னது தவறு. 20ம் தேதிக்குள் அந்த எண்ணிக்கை வந்துவிடும். செப்டம்பர் இறுதிக்குள் அந்த எண்ணிக்கை 65 லட்சத்தை தொட்டு விடலாம் என பதிவு செய்து இருந்தார்.