Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் வைரஸ் அலைகளில் ஆக்சிஜன் பெட்டுக்கு அலையாமலிருக்க இப்பவே இந்த செடியை வளருங்க

வைரஸ் அலைகளில் ஆக்சிஜன் பெட்டுக்கு அலையாமலிருக்க இப்பவே இந்த செடியை வளருங்க

வைரஸ் அலைகளில் ஆக்சிஜன் பெட்டுக்கு அலையாமலிருக்க இப்பவே இந்த செடியை வளருங்க

செடியாகவும் மரமாகவும் இருக்கும் ஆடா தோடை மூலிகை குணங்கள் நிறைந்தது. இவை எங்கு நிறைந்திருக்கிறதோ அங்கு ஆக்ஸிஜன் அளவு அதிகமாக இருக்கும். அதனால் தான் ஆடாதோடை ஆயுள் மூலிகை என்று அழைக்கப்படுகிறது.

வைரஸ் அலைகளில் ஆக்சிஜன் பெட்டுக்கு அலையாமலிருக்க இப்பவே இந்த செடியை வளருங்க

உடல் சோர்வு, தசை பிடிப்பு, வலி போன்றவை நீங்க ஆடாதோடைஇலையை பறித்து கஷாயமாக்கி குடிப்பார்கள். அது மட்டுமல்லாமல் ஆடாதோடை நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவும். சிறு குழந்தைகளுக்கு அவ்வபோது சளி வந்தால் ஆடாதோடை இலையை உலரவைத்து பொடித்து வைத்துகொள்ள வேண்டும். அரைடீஸ்பூன் தேனில் கால் டீஸ்பூன் அளவு ஆடாதோடை பொடியை குழைத்து நாக்கில் தடவ வேண்டும். இதனால் நுரையீரல் ஆரோக்கியமாக பலமாக இருக்கும்.

இது கபம் மட்டும் இல்லாம, இரத்தக் கொதிப்பு, பெண்களின் மாதவிடாய் கால அதிக உதிரப்போக்கு, பிரசவித்தப்பின் உதிரப்போக்கு குறையவும், கர்ப்பப்பை வலுப்படவும் கூட ஆடாதொடை ரொம்ப உதவியா இருக்கும்

சாதாரண சளி ஜலதோஷத்திற்கு ஆடாதொடை, துளசி, சுக்கு, மிளகு, திப்பிலி, தூதுவளையை  கொதிக்கும் நீரில் சேர்த்து வைத்து குடிக்கலாம் .

ஆடாதொடையின் அருமைகள்…

மேல் சளி, மூக்கடைப்பு, தொண்டை வலி, நெஞ்சில் கபம், அலர்ஜி, ஆஸ்துமா என எல்லா விதமான கபம் சம்பந்தப்பட்ட நோய்க்கும் நல்ல முதலுதவியா இருக்கும் .ஆடாதொடை+மிளகு கசாயத்தை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்

கஷாயம் தயாரிக்கும் முறை .

ஆடாதொடை இலை 8-அல்லது ஆடாதொடை கசாயப் பவுடர் கடைகலில்  கிடைக்கும், அதுல ரெண்டு ஸ்பூன் எடுத்து  அதை ரெண்டு டம்ளர் தண்ணில போட்டு கொதிக்க வெச்சு, அரை டம்ளரா சுண்ட வெச்சுக்கனும். இந்த வடிக்கட்டின கசாயத்த, சாப்பாட்டுக்கு முன்னாடி மூணு வேளை, இரண்டு நாள்  குடிச்சா ஜலதோஷம் இருந்த இடம் காணாம போயிடும் .

வைரஸ் அலைகளில் ஆக்சிஜன் பெட்டுக்கு அலையாமலிருக்க இப்பவே இந்த செடியை வளருங்க

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

இந்தியாவில் குறையும் கொரோனா மற்றும் பலி எண்ணிக்கை : முக்கிய தகவல் இதோ!!

இந்தியாவில் கடந்த சில வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்ததால் மத்திய மாநில அரசுகள் அதிர்ச்சியில் உறைந்து போயின. இதை தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள்...

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை – 16 இலக்க எண் , சிவிவி எண் இனி வேண்டாம்; ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு!

ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யும் நபரா நீங்கள்? இது உங்களுக்கான செய்தி என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதாவது சமீபகாலமாக ஆன்லைன் பரிவர்த்தனை என்பது அதிகமாகிவிட்டது. முன்பெல்லாம் வங்கிக்கு சென்று பணம் எடுத்து...

வளைகாப்பு நிகழ்ச்சி முக்கியமா? ஜிஎஸ்டி கூட்டம் முக்கியமா? அமைச்சர் பிடிஆரை வறுத்தெடுக்கும் பாஜக

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பொறுப்பற்ற முறையில் அவள் பதிலளித்தார் என்று நெட்டிசன்கள் வலைதளங்களில்...

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9...
TopTamilNews