“ராணுவ பாதுகாப்புடன் ஆக்சிஜனை அனுப்பி வைக்க வேண்டும்”

 

“ராணுவ பாதுகாப்புடன் ஆக்சிஜனை அனுப்பி வைக்க வேண்டும்”

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. நாளொன்றுக்கு 10 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது 3 லட்சத்தை எட்டியுள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பாதிப்பு அதிகமாக இருக்கும் டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதால் உடனடியாக ஆக்சிஜன் விநியோகம் செய்யுமாறு மருத்துவமனைகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

“ராணுவ பாதுகாப்புடன் ஆக்சிஜனை அனுப்பி வைக்க வேண்டும்”

டெல்லி மட்டுமில்லாது பிற மாநிலங்களிலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், டெல்லிக்கு அனுப்பப்படும் ஆக்சிஜனை பிற மாநிலங்கள் தடுத்து நிறுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடியிடம் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விளக்கினார்.

“ராணுவ பாதுகாப்புடன் ஆக்சிஜனை அனுப்பி வைக்க வேண்டும்”

காணொளி வாயிலாக நடந்த கூட்டத்தில் பேசிய அவர், ஆக்சிஜன் ஆலைகள் அனைத்தையும் ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். டெல்லிக்கு வரும் ஆக்சிஜன்கள் பிற மாநிலங்களால் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இதற்கு தீர்வு வேண்டும். ராணுவ பாதுகாப்புடன் ஆக்சிஜனை அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமென மத்திய அரசு உறுதியளித்துள்ளது.