இங்கிலாந்தில் பூனைக்கு கொரோனா… பீதி வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுரை

இங்கிலாந்தில் பூனைக்கு கொரோனா… பீதி வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுரை

இங்கிலாந்தில் பூனை ஒன்றுக்கு கொரோனாத் தொற்று உறுதியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் செல்லப் பிராணிகள் மூலமாக மனிதர்களுக்கு கொரோனா பரவும் என்று மக்கள் அஞ்ச வேண்டாம் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் பூனைக்கு கொரோனா… பீதி வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுரை
கொரோனா விலங்குகள் மூலமாகவும் பரவும் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் உலக சுகாதார நிறுவனம் இதை ஏற்கவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்தில் பூனை ஒன்றுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. பூனையின் உரிமையாளருக்கு கொரோனாத் தொற்று இருந்தது. சிகிச்சைப் பெற்று அவர் வீடு திரும்பிய நிலையில் பூனையின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் பூனைக்கு கொரோனா… பீதி வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுரை
கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அதன் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்தனர். பூனைக்கு ஏற்படும் எந்த ஒரு கிருமித் தொற்றுடனும் அது ஒத்துப்போகாத நிலையில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா உறுதியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆய்வுக்கூடம், மேலும் ஒரு முறை பரிசோதனை செய்து அதை உறுதி செய்தது.

இங்கிலாந்தில் பூனைக்கு கொரோனா… பீதி வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுரை
இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறுகையில், “பூனையின் உரிமையாளருக்கு கொரோனா இருந்துள்ளது. செல்லப்பிராணிகள் மூலம் கொரோனா பரவும் என்று எந்த ஆய்வும் இல்லை. எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம். நீங்கள் வளர்க்கும் செல்லப் பிராணி உடல்நலம் குன்றியிருந்தால் வீட்டில் வைத்தே அதற்கு சிகிச்சை கொடுங்கள். முடியாத நிலையில் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள். அதை வெளியிடங்களுக்கு செல்ல விடாதீர்கள்” என்றார்.