இந்தியாவில் 13 ஆயிரம் மொபைல் போன்கள் ஒரே ஐ.எம்.இ.ஐ எண்ணில் இயங்குகின்றன

 

இந்தியாவில் 13 ஆயிரம் மொபைல் போன்கள் ஒரே ஐ.எம்.இ.ஐ எண்ணில் இயங்குகின்றன

டெல்லி: இந்தியாவில் சுமார் 13,500 மொபைல் போன்கள் ஒரே ஐ.எம்.இ.ஐ எண்ணில் இயங்குவதாக தெரியவந்துள்ளது.

ஐ.எம்.இ.ஐ எண் (IMEI – International Mobile Equipment Identity) என்பது மொபைல் சாதனத்தை அடையாளம் காண உதவுகிறது. இந்தியாவில் சுமார் 13,500 மொபைல் போன்கள் ஒரே ஐ.எம்.இ.ஐ எண்ணில் இயங்குவதாக தெரியவந்துள்ளது. மீரட் போலீசார் இதனை கண்டறிந்துள்ளனர். ஒருவரது மொபைல் போன் பழுது பார்க்கப்பட்ட பின்பும் சரியாக வேலை செய்யவில்லை. இதையடுத்து காவல்துறையினர் அவரது மொபைல் போனை சைபர் கிரைம் துறையில் உள்ள ஊழியர்களுக்கு பரிசோதனைக்காக வழங்கினர். அப்போது தான் இந்தியாவில் சுமார் 13,500 மொபைல் போன்கள் ஒரே ஐ.எம்.இ.ஐ எண்ணில் இயங்குவதாக தெரியவந்தது.

இந்தியாவில் 13 ஆயிரம் மொபைல் போன்கள் ஒரே ஐ.எம்.இ.ஐ எண்ணில் இயங்குகின்றன

இதையடுத்து சம்மந்தப்பட்ட மொபைல் போன் உற்பத்தி நிறுவனம் மற்றும் அதன் சேவை மையம் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கடுமையான பாதுகாப்பு பிரச்சினை என்று மீரட் எஸ்.பி அகிலேஷ்.என் சிங் தெரிவித்தார். இது குறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மொபைல் போன் நிறுவனத்தின் அலட்சியம் என்று இந்த விஷயம் கருதப்படுகிறது. ஆனால் குற்றவாளிகள் இதை தங்களுக்கு சாதகமாக  பயன்படுத்தக் கூடிய அபாயம் உள்ளது.