24 மணிநேரமும் ஏடிஎம்மில் ஒடிபி முறையில் பணம் !18ம் தேதி முதல் அமல் – எஸ்பிஐ முடிவு

24 மணிநேரமும் ஏடிஎம்மில் ஒடிபி முறையில் பணம் !18ம் தேதி முதல் அமல் – எஸ்பிஐ முடிவு

நாடெங்கிலும், எஸ்பிஐ ஏடிஎம்களில் 10 ஆயிரம் ருபாய் மற்றும் அதற்கு அதிகமான தொகையை இனி, ஒடிபி முறையில் மட்டுமே எடுக்க முடியும். ஏற்கனவே இரவு நேரங்களில் மட்டும் நடைமுறையில் உள்ள இந்த சேவையை வரும் 18ம் தேதி முதல் 24 மணி நேரமும் அமல்படுத்த பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது.

24 மணிநேரமும் ஏடிஎம்மில் ஒடிபி முறையில் பணம் !18ம் தேதி முதல் அமல் – எஸ்பிஐ முடிவு

ஏற்கனவே கடந்த ஜனவரி 1ம் தேதியன்று, நாடெங்கிலும் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்களில் தினமும், இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணிவரை ஒடிபி முறையில் பணம் எடுக்கும் வசதியை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியிருந்தது. இதன் படி, 10 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை ஏடிஎம்மில் எடுக்கும்போது, எஸ்பிஐ வங்கி கணக்குடன் இணைத்திருக்கும் செல்போன் எண்ணிற்கு அனுப்ப ப்படும் ஒடிபி எண்ணை, ஏடிஎம் திரையில் இட்டால் மட்டுமே பணம் எடுக்க முடியும்.

24 மணிநேரமும் ஏடிஎம்மில் ஒடிபி முறையில் பணம் !18ம் தேதி முதல் அமல் – எஸ்பிஐ முடிவு

இந்நிலையில் வரும் 18ம் தேதி முதல் இதே நடைமுறையை 24 மணிநேரமும் செயல்படுத்த பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது. இதன் மூலம், மோசடி சம்பவங்கள் குறையும் என்றும் கார்டு ஸ்கிம்மிங் மற்றும் குளோனிங் செய்து, வாடிக்கையாளர்களின் பணம் திருடுபோவது தடுக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

24 மணிநேரமும் ஏடிஎம்மில் ஒடிபி முறையில் பணம் !18ம் தேதி முதல் அமல் – எஸ்பிஐ முடிவு