டிக்டாக்கை கைப்பற்றும் போட்டி… ஆரக்கிள் நிறுவனமும் களம் இறங்கியது!

டிக்டாக்கை கைப்பற்றும் போட்டி… ஆரக்கிள் நிறுவனமும் களம் இறங்கியது!

டிக்டாக்கை கைப்பற்றும் போட்டி… ஆரக்கிள் நிறுவனமும் களம் இறங்கியது!
அமெரிக்காவில் டிக்டாக் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தைக் கைப்பற்றும் போட்டியில் ஆரக்கிள் நிறுவனமும் களம் இறங்கியுள்ளது.

டிக்டாக்கை கைப்பற்றும் போட்டி… ஆரக்கிள் நிறுவனமும் களம் இறங்கியது!

இந்தியாவில் சீன மொபைல் ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்ட போது டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களைக் காரணம் காட்டி அமெரிக்காவும் தடை செய்துள்ளது. இதனால், உலக அளவில் சீன செயலியான டிக்டாக் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. இதனால் அந்த ஆப்பை விற்கும் நிலைக்கு அதன் தாய் நிறுவனமான பைட்டன் டான்ஸ் தள்ளப்பட்டுள்ளது.

டிக்டாக்கை கைப்பற்றும் போட்டி… ஆரக்கிள் நிறுவனமும் களம் இறங்கியது!

வடக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பகுதிகளுக்கான டிக்டாக் செயல்பாட்டை கைப்பற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் களத்தில் குதித்தது. தற்போது ஆரக்கிள் நிறுவனமும் இதை வாங்க முடிவு செய்துள்ளது.

டிக்டாக்கை கைப்பற்றும் போட்டி… ஆரக்கிள் நிறுவனமும் களம் இறங்கியது!

ஆரக்கிள் நிறுவனம் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுடன் மட்டுமே தொடர்பில் உள்ளது. மக்களுடனான நேரடி தொடர்பு அதற்கு இல்லை.
ஆரக்கிள் நிறுவனம் தற்போது பைட்டன் டான்ஸ் முதலீட்டு நிறுவனங்கள் சிலவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

டிக்டாக்கை கைப்பற்றும் போட்டி… ஆரக்கிள் நிறுவனமும் களம் இறங்கியது!

இதன் மூலம் டிக்டாக்கை கைப்பற்ற அது முயற்சித்து வருகிறது. இது பற்றி ஆரக்கிள் நிறுவனம் வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை. ஆனால், ஃபைனான்ஷியல் டைம்ஸ் இதழில் இது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து ஆரக்கிளின் பங்குகள் 2.2 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.