உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தனி முத்திரை பதித்த ரஜினிக்கு பிறந்த‌நாள் வாழ்த்து -ஓபிஎஸ்

 

உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தனி முத்திரை பதித்த ரஜினிக்கு பிறந்த‌நாள் வாழ்த்து -ஓபிஎஸ்

நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை 70 ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ள நிலையில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தனி முத்திரை பதித்த ரஜினிக்கு பிறந்த‌நாள் வாழ்த்து -ஓபிஎஸ்

பெங்களூரில் 1950 ஆம் ஆண்டு பிறந்த ரஜினிகாந்த், தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி, தற்போது ஆன்மீக அரசியலையும் முன்னெடுக்கப்போகிறார். இவர் தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

இந்நிலையில் துணை முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து #Superstar ஆக கோலோச்சி வரும் அன்புச்சகோதரர் @rajinikanth அவர்கள் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஆன்மீக அரசியலை முன்னெடுக்கும் ரஜினிகாந்துடன் அதிமுக கூட்டணி வைத்தாலும்வைக்கலாம் என துணைமுதலமைச்சர் ஓபிஎஸ் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.