நடிகர் விவேக் நலம் பெற ஓபிஎஸ் வாழ்த்து!

 

நடிகர் விவேக் நலம் பெற ஓபிஎஸ் வாழ்த்து!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து ஓபிஎஸ் ட்வீட் செய்துள்ளார்.

பிரபல நடிகர் விவேக் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் நிலையில் இன்று காலை மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்பட படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்த நிலையில் நடிகர் விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார். இந்த சூழலில் நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விவேக் நலம் பெற ஓபிஎஸ் வாழ்த்து!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கிற்கு மூச்சுத்திணறல் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் திரு.விவேக்
அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.