Home அரசியல் போடி தொகுதியில் ‘கண்’ வைக்கும் ஓ.பி.எஸ்.

போடி தொகுதியில் ‘கண்’ வைக்கும் ஓ.பி.எஸ்.

தமிழகத்தின் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் இப்போதெல்லாம் சென்னையை விட்டு, திடீர், திடீரென மாயமாகி விடுகிறார்.அவரைப் பின் தொடர்ந்து கண் காணித்தால் தேனிக்கும், சென்னைக்கும் இடையே பறந்தபடி இருக்கிறார். எதற்காக அடிக்கடி தேனி சென்று வருகிறார் என்று விசாரித்தால், காரணம் தங்கத் தமிழ் செல்வன் என்பது தெரிய வந்தது.
தேனி வடக்கு மாவட்டப் தி.மு.க பொறுப்பாளராக நியமிக்கப்படிருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன் போடி, பெரியகுளம் ஆகிய தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தரும்படி அவருக்கு திமுக மேலிடம் உத்தரவு போட்டிருக்கிறது. இதனால் தங்க தமிழ்ச்செல்வன் தொகுதிப் பணிகளில் மிக சீரியசாக களம் இறங்கியிருக்கிறார்.இதுமட்டுமல்ல, வரும் சட்டமன்றத் தேர்தலில் போடியில் தங்க தமிழ் செல்வன் நிற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதனாலேயே தனக்கு ஆயிரம் பணிகள் தலைக்கு மேல் இருந்தாலும் அவ்வப்போது தேனி மாவட்டத்ததையும் ‘விசிட்’ அடித்து வருகிறார் ஓ. பன்னீர்செல்வம். கடந்த2019 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி வாய்ப்பை இழந்த போதும் தேனி தொகுதியில் அ.தி.மு.க-வை வெற்றிபெறவைத்து, மகனை எம்.பி-யாக்கியவர் பன்னீர் செல்வம். அதனால் வரும் சட்டமன்றத் தேர்தலிலும், தன்னுடைய செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடி அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.


சமீபத்தில் போடி சென்ற ஓ.பி.எஸ். அங்குள்ள கோயில் பணிகள், கட்சி நிர்வாகிகளின் வீட்டு விசேஷங்கள் தவிர பல்வேறு திட்டப்பணிகளையும் செய்து தொடங்கி வைத்தார் இதில் மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமமான மேலப்பரவுக்கு நடந்தே சென்று பொது மக்களை அசத்தினார்.தேனி மாவட்டத்துக்குள் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் என நான்கு சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. இந்தத் தேர்தலில் அந்த நான்கையும் வென்றே தீருவது என்பதில் பன்னீர் உறுதியாக இருக்கிறாராம். இதில் போடியில் ஓ.பி.எஸ் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

போராட்டம்னு வந்துட்டா… பேரணியில் சிங்க நடை போடும் பாட்டி!

வேளாண் சட்டங்களை எதிர்த்து நாசிக்கிலிருந்து மும்பை நோக்கிய விவசாயிகள் பேரணியில் மூதாட்டி ஒருவர் கம்பீரமாக நடந்துவரும் வீடியோ வைரலாகியிருக்கிறது. இளைஞர்களைக் காட்டிலும் முதியவர்களின் போராட்டக்குணம் சற்றே...

‘திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி; ஸ்டாலின் தான் அதுக்கு சேர்மேன்’ – முதல்வர் கடும் விமர்சனம்!

திமுகவில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாரும் ஆட்சி பொறுப்பிற்கு வர முடியாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். கள்ளக்குறிச்சியில் மொழிப்போர் தியாகிகள் தின நாளில்...

குடியரசு தலைவர் திறந்தது நேதாஜி படமா? நேதாஜி ரோலில் நடித்தவரின் படமா?

குடியரசு தலைவர் திறந்துவைத்தது நேதாஜியின் படமா அல்லது கும்னாமி என்ற திரைப்படத்தில் நேதாஜியாக நடித்தவரின் படமா என்ற விவாதம் ட்விட்டரில் எழுந்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர்...

இரட்டை வேடம் போடுவது திமுக தான் : அமைச்சர் விமர்சனம்!

சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக இரட்டை வேடம் போடுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருகிறது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு...
Do NOT follow this link or you will be banned from the site!