முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்

 

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்

மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் , கொரோனாதொற்றின் இரண்டாம் அலை காலமான ஏப்ரல் ,மே, ஜூன் 3 மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு 20,000 ரூபாயும், இதர பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு 20,000 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்றும் பணியில் கடந்த ஓராண்டாக மருத்துவர்களும், செவிலியர்களும், இதர பணியாளர்களும் அயராது பணியாற்றி வருகின்றனர், இப்பணியில் தமது உயிரை துச்சமென மதித்து காலம் பணியாற்றிய சில மருத்துவர்கள் தமது இன்னுயிரையும் தியாகம் செய்துள்ளனர், அப்படி சிகிச்சை பணியாற்றியபோது தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கும் , தலா 25 லட்சம் ரூபாய் தொகையை இழப்பீடாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றும் அவர் அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு ராமதாஸ் உள்ளிய பலரும் நன்றி கூறி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்

இந்நிலையில் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ” கொரோனா பேரிடர் காலத்தில் உயிர் காக்கும் உன்னத சேவை புரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்க வேண்டுமென்று சில தினங்களுக்கு முன்பு நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று,ஊக்கத்தொகையை அறிவித்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.