“மொத்தமா திமுகவுல ஐக்கியமாயிடுவோம்” – ஈபிஎஸ்ஸை மிரட்டிய ஓபிஎஸ் டீம்!

 

“மொத்தமா திமுகவுல ஐக்கியமாயிடுவோம்” – ஈபிஎஸ்ஸை மிரட்டிய ஓபிஎஸ் டீம்!

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டன. திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ள திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. ஸ்டாலின் மே 7ஆம் தேதி பதவியேற்றார். அரசு இயந்திரம் வேகமாக இயங்கி கொண்டிருக்கிறது. இதனால் திமுக ரூட் கிளியர் ஆகிவிட்டது.

“மொத்தமா திமுகவுல ஐக்கியமாயிடுவோம்” – ஈபிஎஸ்ஸை மிரட்டிய ஓபிஎஸ் டீம்!

ஆனால் 65 இடங்களில் வெற்றிபெற்ற எதிர்க்கட்சியான அதிமுகவில் கடும் இழுபறியாக போய்க் கொண்டிருந்தது. சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவியது. தமிழ்நாடு மீண்டும் தர்மயுத்தம் காணப் போகிறதா என்றெல்லாம் பேச்சு எழுந்தது. இச்சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. கூட்டத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இரு தரப்புக்கும் கடும் மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது. கூட்டம் முடிந்து ஜெயலலிதா சமாதிக்கு இருவரும் வந்தபோது இரு தரப்பு ஆதரவாளர்களும் கோஷங்களை எழுப்பினர்.

“மொத்தமா திமுகவுல ஐக்கியமாயிடுவோம்” – ஈபிஎஸ்ஸை மிரட்டிய ஓபிஎஸ் டீம்!

இச்சூழலில் இன்று மீண்டும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் , “உங்கள் இஷ்டத்துக்கு செயல்பட்டு, உங்கள் நோக்கம் போல் வேட்பாளர்களை தேர்வு செய்து தேர்தலை நடத்தினீர்கள். இப்போது கட்சி தோற்றுவிட்டது. இதற்கான காரணத்தைச் சொல்லிவிட்டு எதிர்க்கட்சி தலைவர் தேர்வை பற்றி பேசுங்கள்” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார் ஓபிஎஸ் டீம். எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டால் நாங்கள் திமுகவுக்கு செல்லவும் தயங்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். அதிகப்படியான கொங்கு மண்டல எம்எல்ஏக்களை கைவசம் வைத்திருப்பதால் எடப்பாடியே எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.