தேர்தல் தோல்விக்கு ஈபிஎஸ் தான் காரணம்; வன்னியர்களுக்கு ஒதுக்கீடு வழங்கியதே காரணம்- ஓபிஎஸ்

 

தேர்தல் தோல்விக்கு ஈபிஎஸ் தான் காரணம்; வன்னியர்களுக்கு ஒதுக்கீடு வழங்கியதே காரணம்- ஓபிஎஸ்

அதிமுகவில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் ஈ.பி.எஸ் -ஓ.பி.எஸ். தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் தோல்விக்கு ஈபிஎஸ் தான் காரணம்; வன்னியர்களுக்கு ஒதுக்கீடு வழங்கியதே காரணம்- ஓபிஎஸ்

நடந்துமுடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றிப்பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அக்கட்சி தலைவர் ஸ்டாலின் முதல்வராகவும் பதவியேற்ற கொண்டுவிட்டார். இந்த சூழலில் சட்டமன்ற எதிர்கட்சிக் தலைவரை தேர்வு செய்ய அதிமுக கூட்டம் கூடியது. இதில் தேர்தலில் வெற்றிப்பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய கூட்டம் நடைபெறும் நிலையில், கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதையடுத்து ஓபிஎஸ்- ஐயே தலைவராக்க வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் எவ்வித முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வது குறித்து இன்னும் முடிவாகவில்லை.

இந்நிலையில் தேர்தக் தோல்விக்கு ஈபிஎஸ் எடுத்த முடிவுதான் காரணம் என தெரிவித்த ஓபிஎஸ், ஒவ்வொரு தடவையும் விட்டு கொடுக்க முடியாது எனவும், வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு அறிவித்ததால்தான் தென் மாவட்டத்தில் வெற்றியை இழந்தோம் என்றும் தெரிவித்துள்ளார்.