குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கணும்! செய்தியாளர்களை விலைக்குவாங்கிய ஓபிஎஸ் மகன்!!

 

குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கணும்! செய்தியாளர்களை விலைக்குவாங்கிய ஓபிஎஸ் மகன்!!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இளைய மகன் ஜெயபிரதீப்க்கு தேனி பிரஸ் கிளப் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தேனி மாவட்ட பத்திரிக்கையாளர்களை விலைக்கு வாங்க நினைக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப் தேர்தல் காலத்தில் தேர்தல் தேதி அறிவித்த பிறகு துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் கைலாசபட்டி பண்ணை வீட்டில் செய்தியாளர்களை அழைத்து உணவு உபசரித்து பணம் வழங்கி தங்கள் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கும் படி செய்தியாளர்களுக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கணும்! செய்தியாளர்களை விலைக்குவாங்கிய ஓபிஎஸ் மகன்!!

துணை முதல்வரின் மகன் ஜெயபிரதீப் செய்தியாளர்களை விலைக்கு வாங்கும் அழைப்பை ஏற்காமல் சில முக்கிய செய்தியாளர்கள், விலைக்குப் போகாமல் ஓ.பி.எஸ் பண்ணை வீட்டிற்குப் போகவில்லை ஒரு சிலர் அவர்களுடைய அழைப்புக்கு மரியாதை கொடுத்து விலைக்கு போன சில செய்தியாளர்கள், செய்தியாளர்களை விலைக்கு வாங்க நினைக்கும் இதுபோன்ற குறுக்கு வழி பாதையை வன்மையாக கண்டிப்பதாக தேனி பிரஸ் கிளப் தெரிவித்துள்ளது. மேலும் இதை தமிழக தேர்தல் அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி பிரஸ் கிளப் புகார் மனு அளிக்க இருக்கிறது.