மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழுவில் ‘ஓபிஎஸ் மகன்’!

 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழுவில் ‘ஓபிஎஸ் மகன்’!

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் மருத்துவமனை அமைக்கும் பணி தொடங்காததால், எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இப்போது வரையில் சாலை, சுற்றுச் சுவர் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் மட்டுமே முடிவடைந்திருக்கின்றன. சுமார் 5.5 கி.மீ தூரத்துக்கு சுற்று சுவர் அமைக்கப்படுவதாக தெரிகிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழுவில் ‘ஓபிஎஸ் மகன்’!

அண்மையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் நக்கலடித்திருந்தார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. மோடி கட்டிய மருத்துவமனையை கையோடு கொண்டு வந்திருக்கிறேன் என்று கூறி செங்கல் ஒன்றைத் தூக்கி காட்டினார். உதயநிதியின் இந்த செயல், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மக்களை சிந்திக்க வைத்தது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழுவில் ‘ஓபிஎஸ் மகன்’!

இந்த நிலையில், அதிமுக எம்.பி ரவீந்திரநாத் மற்றும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பொறுப்புக்கு 3 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுள் எம்.பி சு.வெங்கடேசன் விலகிக் கொண்ட நிலையில், இவர்கள் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.