ஓபிஎஸ் கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி… சோதனை மேல் சோதனை!

 

ஓபிஎஸ் கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி… சோதனை மேல் சோதனை!

துணை முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு ஆட்சியில் தான் சோதனை நடக்கிறதென்றால் முதல் நாள் பிரச்சாரத்திலும் சோதனை மேல் சோதனை அரங்கேறியிருக்கிறது. முதல்வர் பதவி கிடைத்தாலும் அது நிரந்தரமான ஒரு பதவியாக ஓபிஎஸ்ஸுக்கு அமையவில்லை. அந்த வகையில் எடப்பாடி பாக்கியவான். அடுத்த தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றாலும் துணை முதல்வர் பதவியும் நிரந்தரமான ஒன்றல்ல. அதனை ஓபிஎஸ்ஸும் அறியாதவர் அல்ல.

ஓபிஎஸ் கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி… சோதனை மேல் சோதனை!

இனிமேல் தர்மயுத்தம் பார்ட் 2 மேற்கொண்டால் காரியம் சாதிக்க முடியாது என்று நினைத்து எடப்பாடியிடம் பணிந்துவிட்டார் என்றே சொல்ல முடியும். இருப்பினும் கெத்து குறையாமல் இருக்கிறார். தேர்தலுக்குப் பின் அந்த கெத்து தொடருமா என்பது சந்தேகமே. ஆட்சி விவகாரம் இப்படியிருக்க அவரின் பிரச்சாரமோ வேறு விதமான மன உளைச்சலை அவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது. வேட்புமனு தாக்கலுக்கு முன் அதிமுக வேட்பாளருக்காகப் பிரச்சாரம் செய்தபோது, பொதுமக்கள் ஓபிஎஸ்ஸின் பேச்சைக் கேட்காமல் நகர்ந்து சென்றனர். இதனால் விரக்தியடைந்த அவர், “அம்மா, தங்கச்சி நான் பேசிட்டிருக்கேன்… நீங்க போய்ட்டு இருக்கீங்க… என்ன பாத்தா பாவமா இல்லையா?” என்று பரிதாபத்துடன் கேட்டார். ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் அவர்கள் சென்றுவிட்டனர்.

இச்சூழலில் அவருக்காகப் பிரச்சாரம் செய்யச் சென்ற முதல் நாளிலேயே கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார் ஓபிஎஸ். மார்ச் 14ஆம் தேதியே போடியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தாலும் நேற்று முதல் பிரச்சாரம் செய்யவே ஓபிஎஸ் திட்டமிட்டிருந்தார். அதற்கான பிரச்சார நிரலும் முன்னரே தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால் மொத்த பர்னிச்சரையும் பிரச்சார வேன் சல்லிசல்லியாக நொறுக்கிவிட்டது.

Image

போடி தொகுதிக்கு உட்பட்ட அரண்மனை புதூர் பகுதியில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு பிரச்சாரம் தொடங்க வேண்டும் என்பது ஓபிஎஸ்ஸின் திட்டம். அதற்கு முன் போடியிலுள்ள குறிப்பிட்ட சமூகத்தினரிடம் ஓபிஎஸ் வாக்கு சேகரித்தார். இதையறிந்த அதே சமூகத்தைச் சேர்ந்த மாற்று கட்சியினர், ஓபிஎஸ்ஸுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது, காவலர்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளால் ஓபிஎஸ் வசமாகச் சிக்கினார். இதனால் ஒன்றரை மணி நேரம் தாமதமானது. இது முதல் சோதனை.

ஓபிஎஸ் கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி… சோதனை மேல் சோதனை!

இரண்டாம் சோதனை முல்லை நகரில் தட்க்ஷிணாமூர்த்தி கோயிலில் அரங்கேறியது. கோயிலில் தரிசனம் செய்துவிட்ட வாக்காளர்களைப் பார்த்து கையசைத்தவாறு பிரச்சார வேனில் ஓபிஎஸ் ஏறினார். சாவியை போட்டு டிரைவர் வேனை ஆன் செய்கிறார். இஞ்சின் ஸ்டார்ட் ஆகவே இல்லை. டிரைவர் எவ்வளவு முயன்றும் ஆன் செய்ய முடியவில்லை. இதனால் செம கடுப்பானாலும் ஓபிஎஸ் மக்கள் மத்தியில் சிரிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. ஒரு கணம் இவரிடம் சிவாஜியே தோற்றுவிடுவார் போல என எண்ணவைத்து விட்டார்.

Image

அதன்பின் திறந்தவெளி பிரச்சார ஜீப்பை ஓபிஎஸ் ஏற்பாடு செய்ய உதவியாளர்களுக்கு கட்டளையிட, எதிர்பாராத விதமாக வேன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு தான் ஓபிஎஸ் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது. டிரைவருக்கும் தான். பின்னர் பிரச்சாரம் செய்ய ஓபிஎஸ் கிளம்பினார். இந்தக் களேபரங்களால் சுமார் 3 மணி நேரம் தாமதப்பட்டு இரவு 8 மணிக்குப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். (ஓபிஎஸ்ஸின் மனதுக்குள் சோதனை மேல் சோதனை போதுமடா சாமி பாடல் ஒலித்திருக்கக் கூடும்)