அதிமுக பொதுக்குழு கூட்டம் எப்போது? ஓபிஎஸ் – ஈபிஎஸ் இன்று ஆலோசனை!

 

அதிமுக பொதுக்குழு கூட்டம் எப்போது? ஓபிஎஸ் – ஈபிஎஸ் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையை தொடங்கினார். அதைத் தொடர்ந்து, நேற்று முதல்வர் பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சாரத்தின் போது, ‘எடப்பாடி அதிமுகவின் எஃகு கோட்டை. 43 ஆண்டுகளாக அங்கு அதிமுகவை தவிர யாரும் வெற்றி பெற்றதில்லை என அதிரடியாக பேசியிருந்தார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் எப்போது? ஓபிஎஸ் – ஈபிஎஸ் இன்று ஆலோசனை!

அதுமட்டுமில்லாமல், பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு வந்த ரூ.1000 தொகையை உயர்த்தி ரூ.2,500 ஆக வழங்குவேன் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இவ்வாறு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அதிமுக அதிரி புதிரியாக களமிறங்கியிருக்கிறது. இந்த நிலையில், அதிமுகவின் பொதுக் குழு கூட்டத்தை எப்போது கூட்டுவது என்பது தொடர்பாக இன்று மாலை 5.30 மணிக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஆலோசனையின் முடிவில், பொதுக்குழு கூட்டத்தின் தேதி குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.