வசிம் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்; மாணவர் தனுஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் : ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிவிப்பு!

 

வசிம் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்; மாணவர் தனுஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் : ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிவிப்பு!

நீட் தேர்வால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவர் தனுஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம், படுகொலை செய்யப்பட்ட வாணியம்பாடியை சேர்ந்த வசிம் அக்ரம் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் அதிமுக சார்பில் வழங்கப்படுமென ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.

வசிம் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்; மாணவர் தனுஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் : ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிவிப்பு!

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரத்தை சேர்ந்த வசீம் அக்ரம் பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சட்டம் ஒழுங்கை சரியாக பேண முடியாத திமுக அரசின் மெத்தன போக்கால் நடுரோட்டில் சமூக விரோதிகளால் கொடூரமான ஆயுதங்களை கொண்டு துடிதுடிக்க கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த செய்தியை கேட்டு வேதனை அடைந்தோம். வசீம் அக்ரம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு எந்த வார்த்தைகளை சொன்னாலும் இட்டு நிரப்ப முடியாத ஈடு செய்ய இயலாத இழப்பாகவே கருதுகிறோம்.

இந்த கொடூர கொலையில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கண்டுபிடித்து உச்ச பட்ச தண்டனையை பெற்றுத் தர அனைத்து நடவடிக்கையையும் அரசு எடுக்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு 1 கோடி ரூபாய் நிவாரண தொகையும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். அதிமுக சார்பில் அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் தரப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மற்றொரு அறிக்கையில், மேட்டூர் தொகுதி கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவகுமார் என்பவரது மகன் தனுஷ், திமுகவின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் நீட் தேர்வுக்கு விலக்கு என்பதை நம்பி மேல்நிலைத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வை எழுத அஞ்சி உயிரை மாய்த்துக் கொண்டார். அவரது மரணத்திற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி அவரது குடும்பத்தில் தகுதியுடைய ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவரது குடும்ப துயரத்தில் பங்கு பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு சிறிய உதவியாக அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.