ஐந்தே வருடத்தில் 843% உயர்ந்த ஓபிஎஸ்ஸின் சொத்துமதிப்பு… வாயை பிளக்க வைக்கும் டேட்டா!

 

ஐந்தே வருடத்தில் 843% உயர்ந்த ஓபிஎஸ்ஸின் சொத்துமதிப்பு… வாயை பிளக்க வைக்கும் டேட்டா!

தமிழக தேர்தல் களம் பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தற்போது வேட்புமனு தாக்கலில் வந்து நிற்கிறது. இன்று நல்ல நாளா என்று தெரியவில்லை. பெரிய பெரிய தலைக்கட்டுகள் அனைத்தும் இன்று தான் வேட்புமனு தாக்கல் செய்தனர். குறிப்பாக, திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், கமல், சீமான், உதயநிதி ஸ்டாலின் என பெரும் பட்டாளமே இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றனர்.

ஐந்தே வருடத்தில் 843% உயர்ந்த ஓபிஎஸ்ஸின் சொத்துமதிப்பு… வாயை பிளக்க வைக்கும் டேட்டா!

வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களில் அசையும் சொத்து, அசையா சொத்து என சொத்து மதிப்புகளைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அந்த வகையில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் அசையும் சொத்து கடந்த 5 ஆண்டுகளில் 843 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு 55 லட்சம் ரூபாயாக இருந்த அவரின் அசையும் சொத்து மதிப்பு தற்போது 5.19 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. அதேபோல அசையா சொத்து 2016ஆம் ஆண்டு 98 லட்சம் ரூபாயாக இருந்தது. தற்போது 2.64 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.