முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் நாளை ஆலோசனை!

 

முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் நாளை ஆலோசனை!

துணை முதல்வர் பன்னீர் செல்வமும், முதல்வர் பழனிசாமியும் நாளை மாலை ஆலோசனை நடத்தவிருக்கின்றனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே எஞ்சியுள்ளன. கொரோனா ஒரு புறம் இருக்க, மறுபுறம் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக திமுக முழுவீச்சில் தேர்தல் பணியில் களமிறங்கி விட்டது என்றே சொல்லலாம். பல்வேறு மாவட்டங்களில் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்றெல்லாம் ஓவியம் வரையப்பட்டு வருகின்றன. அதே போல அதிமுகவும் பாஜகவுடன் இணைந்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் நாளை ஆலோசனை!

இதனிடையே அதிமுகவில் யார் அடுத்த முதல்வர் பதவிக்கு போட்டியிடுவார்கள் என எழுந்த கேள்விக்கு அதிமுக தலைமை ஒரே அறிக்கையில் முற்றுப்புள்ளி வைத்தது. தேர்தல் நெருக்கத்தில் முதல்வர் பதவிக்கு ஓபிஎஸ் போட்டியிடுகிறாரா அல்லது ஈபிஎஸ் போட்டியிடுகிறாரா என்பது தெரிய வரும். இந்த நிலையில் நாளை மாலை 4 மணிக்கு சென்னை ராயபேட்டையில் இருக்கும் அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் நாளை ஆலோசனை நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகளும் பங்கேற்க்க உள்ளனர்.