Home அரசியல் ஓ.பி.எஸ் விளம்பர மார்கெட்டிங் -அதற்காக இப்படியா ?

ஓ.பி.எஸ் விளம்பர மார்கெட்டிங் -அதற்காக இப்படியா ?

ஒரு பிச்சைக்காரர் தினசரி பிச்சை எடுத்து வந்தாராம், அவர் அழுக்காக இருப்பதால் அந்த தெருவில் வசிக்கும் ஒரு பெண் திட்டி அனுப்பி இருக்கிறார். அதைக் கண்ட பக்கத்து வீட்டுச் சிறுவன், மறுநாள் அந்த வீட்டுக்கு, தன் கைகளில் சேறுகளை அள்ளிக் கொண்டு சென்றானாம். அந்த வீட்டு பெண்மணியை அழைத்து, இந்தாருங்கள் கைகளை காட்டுங்கள் என கொட்டுகிறேன் என்றானாம்.

அப்போது அந்த பெண்மணி, ”ஐயய்ய, அழுக்கு என்றாராம். அந்த சிறுவனோ, இந்த அழுக்கில்தான் நெல் விளைகிறது. அதை கழுவிதான் அரிசி எடுக்கிறோம். எனவே அழுக்கை கழுவினால் சுத்தமாகி விடும்” என்றானாம். அதுபோல்தான், நேற்று வந்த மனிதரும் அழுக்காக இருந்தார். அவரை சுத்தம் செய்தால் நாமும் வீட்டுக்குள் அழைக்கலாமே என்றானாம். இதைக் கேட்டதுடம் அந்த பெண்மணிக்கு தான் செய்த தவறை உணர்ந்தாராம். அப்படி அந்த தவறை திருத்திய சிறுவன்தான் ஓ.பன்னீர்செல்வம் என்கிற விளக்கத்துடன் வெளியாகியுள்ள வீடியோ கடந்த ஒரு வாரமாக உலா வருகிறது.

மக்கள் ஆதரவை உருவாக்க வேண்டும் என்றால், கட்சி சார்பாக வீடியோ வெளியிடுவார்கள். கட்சி நோக்கத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால் கட்சியில் ஒரு முக்கிய நிர்வாகியே தனக்கு என தனியாக ஒரு விளம்பரத்தை வெளியிடுவது ஏன் என கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.

வீடியோ மட்டுமல்ல, கடந்த சில நாட்களாக அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக ஓ.பி.எஸ்க்கு அதிக ஆதரவு இருக்கிறது என ஒரு சர்வே சொல்வதாகவும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் போலியான சரிவேயாம். பொய்யான தகவல்களை சர்வே என்கிற பெயரில், ஊடகங்களுக்கு உலவ விட்டதன் பின்னணியில் ஓ.பி.எஸ் நியமித்துள்ள மார்க்கெட்டிங் டீம் உள்ளதாம்.

ஜென் நீதிக்கதைகளை நல்ல விஷயங்களைச் சொல்வதற்காக பயன்படுத்துவார்கள். ஆனால் , அதுபோன்ற கதையை உருவாக்கி அதில் ஓ.பி.எஸ் கதையை ’உல்டா’வாக்கி உலவ விட்டது அந்த மார்கெட்டிங் நிறுவனம்தானாம்.

அதுவும் செயற்குழு கூட்டத்துக்கு முன்னர் வெளியிட்டு, தனக்கு ஆதரவு இருப்பதாக காட்டலாம் என்பதற்காக வெளியிடப்பட்டது. ஆனால் , செயற்குழு கூட்டத்தில் ஆதரவு இல்லாததால் மார்கெட்டிங் தந்திரங்கள் எல்லாம் புஸ்வானம் ஆகிவிட்டதாம்!

எல்லாம் விளம்பரம்தான், அதற்கான இப்படியா என சிரிக்கிறார்கள் அவரது ஆதரவாளர்களே.. ?

மாவட்ட செய்திகள்

Most Popular

பண்ணை பசுமை கடைகளில் இன்று முதல் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45க்கு விற்பனை!

பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் வெங்காய விலை உயர்வு என்பது வழக்கமான ஒன்றுதான்....

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் : எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் யாராக இருந்தாலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

“ரொம்ப குடிக்கிறாரு; நான் தோத்து போய்ட்டேன்” : நடிகை வனிதா விஜயகுமார் கண்ணீர் வீடியோ !

குடிக்கு அடிமையாக உள்ள பீட்டர் பாலை பிரிந்து விட்டதாக நடிகை வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை வனிதா விஜயகுமாருக்கும் அவரின்...

சென்னை – பெங்களூரூ இடையே இன்றுமுதல் டபுள் டெக்கர் சிறப்பு ரயில்!

சென்னை சென்ட்ரல் - பெங்களூரூ இடையே இன்றுமுதல் டபுள் டெக்கர் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் தினமும் காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில்...
Do NOT follow this link or you will be banned from the site!