“வேளாண் சட்டங்கள் குறித்து திட்டமிட்டு அச்சத்தை ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகள்” – மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்

“வேளாண் சட்டங்கள் குறித்து திட்டமிட்டு அச்சத்தை ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகள்” – மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்

தஞ்சாவூர்

வேளாண் சட்டங்கள் குறித்து காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு விவசாயிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் குற்றம்சாட்டியுள்ளார். தஞ்சையில் வேளாண் சட்டங்கள் குறித்து விளக்க உரை நிழ்த்த வந்த அவர், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, புதிய வேளாண் சட்டத்தினால் குறைந்தபட்ச ஆதார விலை பாதிக்கப்படாது என்றும், ஏற்கனவே உள்ள சந்தையில் பாதிப்பு இருக்காது என்றும் கூறினார்.

“வேளாண் சட்டங்கள் குறித்து திட்டமிட்டு அச்சத்தை ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகள்” – மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்

விவசாய ஒப்பந்த சட்டத்தின் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யக் கூடிய பொருட்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ளப் படுவதாகவும், விவசாய நிலங்களுக்கு கிடையாது எனவும் வி.கே.சிங் விளக்கம் அளித்தார். இந்த சட்டத்தின் மூலம் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும் என உறுதி அளித்த வி.கே.சிங், இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டால், அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம் எனவும், அரசு விவசாயிகள் பக்கம் தான் இருக்கும் என்றும் தெரிவித்தார். அத்துடன், இந்த சட்டத்தின் நோக்கம் விவசாயிகள் பயனடைய வேண்டும் என்பது தான் என்றும் வி.கே.சிங் கூறினார்